திருமணத்திற்காக வெண்ணிலா போடும் ட்ராமாவில் சிக்கினாரா விஜய்? அடுத்து என்ன? மகாநதி

By subhashini · 18/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் பிரஸ்மீட், விஜய் இடம் வெண்ணிலாவை கல்யாணம் செய்வது பற்றி பேசி இருந்தார்கள். அதற்கு விஜய், என்னுடைய மனைவி காவிரி தான். வெண்ணிலாவை நான் கல்யாணம் செய்ய மாட்டேன். தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று அங்கிருந்து அவர்களை அனுப்பி விட்டார்கள். இதை எல்லாம் அந்த மீடியா டிவியில் போட்டு விட்டார்கள். இதை பார்த்து விஜய்க்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் அவர் ராகினியை அழைத்து விசாரித்தார். அப்போது ராகினி, எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார். அதற்கு விஜய் கோபப்பட்டார்.

விஜய், அஜய்யை அழைத்து வெண்ணிலா விஷயமாக பேசி இருந்தார். ஆனால், அஜய் எனக்கு எதுவுமே தெரியாது என்று டிராமா போட்டார். கோபத்தில் விஜய், இதுவரை நீங்கள் இந்த வீட்டில் செய்தவரையும் போதும், வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள் என்று சொன்னவுடன் ராகினி ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார். ரொம்ப ஏளனமாக விஜய்யும், அவர் குடும்பத்தையும் பேசி இருந்தார். பின் விஜய், தாத்தா, பாட்டி மூவருமே சேர்ந்து அஜய்- ராகினி இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் நிவின், காவிரியை பார்க்க சென்றிருந்தார். அப்போது நிவின், விஜய் தன்னிடம் பேசிய விஷயமெல்லாம் சொன்னார்.

மகாநதி சீரியல்:

அதற்கு காவிரி, சீக்கிரமாகவே எங்கள் பிரச்சனை தீர்ந்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து கங்கா- யமுனா இருவருமே அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு நிவினை பார்த்தவுடன் யமுனா பயங்கரமாக கோபப்பட்டார். அப்போது காவிரி, தனக்கு புது ஆர்டர் கிடைத்தது பற்றி சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், யமுனா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காவிரி மீது தான் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் பசுபதி, வெண்ணிலாவை அழைத்து விஜயை திருமணம் செய்து கொள்ளுவது பற்றி தேவையில்லாமல் அவருக்கு யோசனை தந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் பசுபதி, நீ எப்படியாவது அழுது டிராமா செய்து விஜயை திருமணத்திற்கு சம்மதிக்க வை. அது உன் கையில் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் வெண்ணிலாவும் சரி என்றார். இன்னொரு பக்கம் விஜய், நிவினை சந்தித்து பேசி இருந்தார். அப்போது நிவின், வெண்ணிலா காவிரியிடம் செய்த பிரச்சனையை பற்றி பேசி இருந்தார். அதற்கு விஜய், நான் கூடிய சீக்கிரத்திலேயே இந்த பிரச்சனைக்கு முடிவு செய்கிறேன். எதுவாக இருந்தாலும் நானும் காவிரியும் சேர்ந்து வாழ்வதில் எந்த மாற்றமும் இல்லை என்பர் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் காவிரியின் அம்மா, நீ தயவு செய்து இந்த தாலியை கழட்டி விடு.

சீரியல் ட்ராக்:

விஜய்க்கு விவாகரத்து கொடுத்துவிடு. நீ எப்படி எதுவுமே நடக்காது போல் இருக்கிறாய். என்னால் முடியவில்லை என்று பேசி இருந்தார். உடனே காவிரி, என் பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் நிம்மதியாக இருங்கள் என்று சொன்னார். கடைசியில் விஜயின் வீட்டிற்கே வெண்ணிலா வந்து விட்டார். அப்போது விஜய் கோபப்பட்டு கத்தி இருந்தார். வெண்ணிலா, நீ தான் என்னுடைய புருஷன். நாளை உனக்கும் எனக்கும் கோவிலில் கல்யாணம் என்றெல்லாம் அழுது புலம்பி டிராமா செய்தார். அதற்கு விஜய், அது முடியாது. என்றைக்குமே காவிரி தான் என் மனைவி. உனக்கு நான் பாவம் பார்த்தது தான் தப்பு. உன்னை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று கோபப்பட்டு கத்தி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=WTUvnIrL_D8

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோவிலில் வெண்ணிலா விஜய் வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் விஜய், காவிரியுடன் பொருட்காட்சி நடக்கும் இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நபர், வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் போட்டு விடுகிறார். அதை பார்த்த வெண்ணிலா கோபத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப் போகிறார். உடனே அங்கு வந்த போலீசார் தடுத்து விடுகிறார்கள் . அப்போது வெண்ணிலா, இங்கு விஜய் வரவில்லை என்றால் நான் தீக்குளிப்பேன் என்று கதறி அழுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full