சாரதா எடுத்த விபரீத முடிவால் பதறிப்போன குடும்பம், விஜய் சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போட்டார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வந்தார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
காவேரி, வீட்டில் உண்மை தெரிந்து என்ன சொல்வார்களோ? என்று புலம்பி கொண்டிருந்தார். விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் தைரியமாக இரு என்றார். பின் காவிரி- விஜய் இருவரும் வீட்டிற்குள் வந்தவுடன் பாட்டி, தாத்தா, சித்தப்பா எல்லோருமே விசாரித்தார்கள். விஜய் ஏதேதோ சொல்லி சமாளித்தார். சித்தப்பா, இல்லையே காவேரி அப்பாவிற்கு இரண்டு பொண்டாட்டி. அவர்களால்தான் சொத்தை மாற்ற முடியவில்லை. பங்கு கேட்டு பிரச்சினை செய்கிறார்களே என்று நடந்ததை எல்லாம் நேரில் பார்த்தது போலவே சென்றார்.
மகாநதி:
பின் பாட்டி, காவிரியின் குடும்பத்தையும் காவிரியையும் பற்றியும் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட விஜய், எல்லோரிடமும் சண்டை போட்டு இனிமேல் காவிரியை பற்றி யாரும் பேசக்கூடாது என்று ரூமிற்கு சென்று விட்டார். இருந்தாலுமே காவேரி, பாட்டி சொன்னதையும், தன் அப்பா செய்த துரோகத்தையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் சாரதா, சந்தானம் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக உடைந்து போய் அழுதார். கங்கா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் சாராதவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சந்தானம், செய்த துரோகத்தை நினைத்து சாரதா தற்கொலை செய்ய உள்ளே சென்று விடுகிறார். கங்கா, சந்தானத்தின் அம்மா இருவருமே கதவை தட்டுகிறார்கள். ஆனால், சாரதா கேட்கவே இல்லை. அப்போது சந்தானத்தின் அம்மா, உன் பிள்ளைகளின் நிலைமையை நினைத்துப் பார் என்று சொல்லி பேசுவதால் மனம் மாறி சாரதா வெளியே வந்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து விஜய்- காவிரி இருவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். சாரதா செய்த தவறான வேலையை நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் சாரதாவை தனியாக அழைத்து சென்ற விஜய், நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். சாரதா, இனி அந்த தவறு செய்ய மாட்டேன். எங்களைப் பற்றி கவலைப்படாதவரை நினைத்து இனிமேல் நான் வாழப்போவதில்லை. என் மகள்களுக்காக நான் இருக்கப் போகிறேன் என்று ஒரு தெளிவான முடிவெடுத்து இருக்கிறார். இதைக் கேட்டு சாரதாவின் மகள்கள் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அதற்கு பின் நிவின்-யமுனா வீட்டிற்கு வருகிறார்கள். சாரதா, தன் மகள்களுக்காக இருப்பேன் என்கிறார். விஜய் தன்னுடைய அம்மாவின் மனதை மாற்றியதற்கு காவிரி ரொம்பவே பெருமைப்பட்டு சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.