சொத்து, அந்தஸ்தை இழந்து காவிரி வீட்டுக்கு வந்த விஜய், சாரதா எடுத்த முடிவு - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், நான் எவ்வளவோ உனக்காக விட்டுக் கொடுத்து விட்டேன். நான் உன்னை விட்டு ரொம்ப தூரம் சென்று விட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். இதனால் காவேரி ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே விஜய், காவிரியின் வீட்டிற்கு வந்து விட்டார். அதை பார்த்தவுடன் காவிரி ரொம்ப சந்தோசப்பட்டார். அப்பொழுது காவிரி அம்மா, பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு குழந்தையை கொடுப்பது நியாயமா? நானே என் மகளை தப்பாக நினைத்து விட்டேன் என்று சொன்னார்.
அதற்கு விஜய், நாங்கள் இருவரும் மனதார கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்த பிறகு தான் காவிரியின் வயிற்றில் குழந்தை வந்தது. நாங்கள் இருவருமே நேசிக்கிறோம். என்னால் காவிரியை விட்டுக் கொடுக்க முடியாது என்றெல்லாம் பேசினார். இதைக் கேட்டு காவிரி அம்மா சந்தோஷப்பட்டார். இருந்தாலும் விஜயின் வீட்டில் பேசியதை வைத்து காவேரி அம்மா வருத்தப்பட்டார். விஜய், என்ன நடந்தது. உண்மையை சொல்லுங்கள் என்றார். உடனே காவிரியின் அம்மா, விஜயின் பாட்டி, சித்தி இருவருமே வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்ட என அனைத்து விஷயத்தையும் சொன்னார். இதைக் கேட்ட விஜய் ஷாக் ஆனார்.
மகாநதி:
தன்னுடைய பாட்டி, சித்தி செய்த வேலையை நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் விஜய், வீட்டில் சரி செய்துவிட்டு நான் காவிரியை அழைத்து செல்கிறேன் என்று அங்கிருந்து கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் விஜயின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்து தாத்தா கோபப்பட்டு சண்டை போட்டார். அந்த சமயம் வந்த விஜய், தன்னுடைய சித்தப்பாவை பார்த்து அவரை அடித்து வெளியே அனுப்பினார்.
சீரியல் ட்ராக்:
உடனே பாட்டி, சித்தி இருவருமே விஜய்யை தடுத்து மன்னிப்பு கேட்டு அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள சொன்னார்கள். அப்போது விஜய், எல்லோருமே என் முதுகில் குத்துகிறார்கள் என்றார். பின் காவிரி இடம் விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி விஜய் கேட்டார். கோபத்தில் பாட்டி, ஆமாம் நான்தான் அதை சொன்னேன். உன் வாழ்க்கை சீரழிவுதே என்னால் பார்க்க முடியாது என்றார். உடனே விஜய், நான் காவிரி விவாகரத்து கொடுத்தாலும் நான் கொடுப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள் என்று கோபப்பட்டு பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? இந்த சொத்து, நாங்கள் எதுவுமே முக்கியமில்லையா? அவள் இந்த வீட்டுக்கு வந்தால் நாங்கள் வெளியே போறோம் என்றார். அதற்கு விஜய், காவிரி உடன் இருந்தால் இதைவிட பல மடங்கு சொத்தை நான் சேர்த்து விடுவேன். நான் அப்பாவாக போறேன். இதை தான் உங்களிடம் சொல்வதாக இருந்தேன் என்றார். உடனே தாத்தா, நீ காவிரியை வீட்டுக்கு அழைத்து வா என்றார். அதற்கு விஜய், இப்போது காவிரி இங்கு வந்தால் மரியாதையாக இருக்காது. நான் காவிரியை மரியாதையாக நடத்த வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறினார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரியின் வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது விஜய், தன்னுடைய பாட்டி- சித்தி பேசிய விஷயத்தை சொல்கிறார். அதைக் கேட்டு காவிரியின் குடும்பம் ஷாக் ஆகிறது. பின் விஜய், என்னுடைய துணி, படிப்போடு மட்டும் இங்கு வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்கிறார். அதற்கு சாரதா, நீங்கள் வீட்டில் இன்னொரு முறை பேசுங்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய், எனக்கு சொத்தை விட காவிரி தான் முக்கியம். அவளுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று உறுதியாக இருப்பதால் சாரதா, விஜய் -காவிரி இருவரையும் ஏற்றுக் கொள்கிறார்.
அதற்குப்பின் நடந்ததை பற்றி காவிரி -விஜய் இருவரும் ரொம்ப எமோஷனாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.