உண்மையை போட்டு உடைத்த காவேரி அம்மா, கோபத்தில் கொந்தளித்த விஜய் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், விஜய் விவாகரத்து விஷயத்தை பற்றி பேசி இருக்க மாட்டார். இது பாட்டியோட வேலையாக தான் இருக்கும் என்று சொன்னார். உடனே விஜய்க்கு போன் செய்த நிவின், காவேரி பற்றி பேசியவுடன் விஜய் கோபப்பட்டு போனை கட் செய்தார். மறுநாள் காலையில் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்குவதற்காக பாட்டி, சித்தி இருவருமே வந்திருந்தார்கள். அப்போது காவிரி, எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் பேசிவிட்டு தான் முடிவெடுப்பேன் என்றார். கடைசியில் கோவப்பட்ட காவிரி, விஜய் இடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்.
அதற்குப்பின் காவேரி, விஜய்க்கு விடாமல் போன் செய்தார். ஒரு கட்டத்தில் விஜய் திரும்ப போன் செய்தார். ஆனால், காவிரியின் அம்மா போனை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுத்தார். அப்போது காவேரி அம்மா, உனக்கும் விஜய்க்கும் என்ன உறவு? ஏன் அவனை விவாகரத்து செய்ய மாட்டுகிறாய் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு கோபத்தில் காவிரி, நான் மனைவியாக நடிக்கப் போனாலும் மனதார அவருடன் வாழ்ந்தேன். நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் காவேரி குடும்பத்தில் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
மகாநதி:
காவிரி, இந்த விஷயம் எனக்கே லேட்டாக தான் தெரியும். விஜய் எனக்காக தான் இங்கு வந்தார். பின் விஜய்க்கு குழந்தை விஷயம் தெரிந்தது, தாங்கள் வாழ்ந்தது, விஜய் தன்னை பார்த்துக் கொண்டது பற்றியெல்லாம் தன் அம்மாவிடம் சொன்னார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்- காவிரியை சேர்த்து வைப்பது பற்றி பேசினார்கள். உடனே குமரனிடம் காவிரி அம்மா, விஜய்யை அழைத்து வர சொன்னார். அதற்குப்பின் காவேரி, விஜய்க்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் வாய்ஸ் மெசேஜில் நடந்ததை எல்லாம் காவிரி சொன்னார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் விஜய்யை நினைத்து அவரின் பாட்டி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிவின்- குமரன் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது நிவின், விஜய் எங்கே இருக்கிறார்? என்றார். கோபத்தில் பாட்டி, அவன் எங்கு இருந்தால் உங்களுக்கு என்ன ப்ரச்சனை? உங்கள் சவுகாசமே தேவையில்லை என்று அவர்கள் இருவரையும் திட்டி அனுப்பி விட்டார். தாத்தா தடுத்துமே பாட்டி கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் காவிரி- கங்கா இருவருமே ரொம்ப எமோஷனலாக குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த குமரன், விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார். அதற்கு காவிரி, நீ எதையும் யோசி யோசிக்காதே. விஜயால் என்னை பார்க்காமல் இருக்க முடியாது. கண்டிப்பாக வந்து விடுவார் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் காவிரி அனுப்பிய மெசேஜை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் காலையில் காவேரி, விஜய்க்கு போன் மேல் போன் செய்தார். கோபத்தில் விஜய் போன் எடுக்கவில்லை. அதற்கு பின் போன் எடுத்த விஜய், என்ன பிரச்சனை என்றார். அப்போது காவிரி, ஏன் மெசேஜை பார்த்து எனக்கு போன் செய்யவில்லை என்று கேட்டார். விஜய், எதற்காக பண்ணனும் என்று கேட்டார்.
https://www.youtube.com/watch?v=gRwdN29cT18
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவிரியின் அம்மா, காண்ட்ராக்ட் போட்டு கல்யாணம் செய்துவிட்டு என் மகளுக்கு குழந்தை கொடுத்திருக்கிறீர்கள். இது நியாயமா? என்று கேட்கிறார். அதற்கு விஜய், நாங்கள் இருவரும் மனதார காதலித்த பிறகு தான் இந்த குழந்தை வந்தது என்று சொல்கிறார். அதற்குப்பின் பாட்டி, சித்தி இருவருமே காவிரி இடம் விவாகரத்து கேட்டு வாங்க வந்த விஷயத்தை எல்லாமே காவேரி அம்மா சொல்கிறார். இதனால் கோபப்பட்ட விஜய், வீட்டிற்கு சென்று சண்டை போடுகிறார். பின் விஜய், காவேரி விவாகரத்துக்கு கையெழுத்து போட்டாலும் நான் போடுவேன் என்று எப்படி நினைத்தீர்கள் என்று கேட்கிறார்.