உண்மை அறிந்து தன் பாட்டியை வெளுத்து வாங்கிய விஜய், காவேரி நிலை என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்யை நினைத்து அவரின் பாட்டி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிவின்- குமரன் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது நிவின், விஜய் எங்கே இருக்கிறார்? என்றார். கோபத்தில் பாட்டி, அவன் எங்கு இருந்தால் உங்களுக்கு என்ன ப்ரச்சனை? உங்கள் சவுகாசமே தேவையில்லை என்று அவர்கள் இருவரையும் திட்டி அனுப்பி விட்டார். தாத்தா தடுத்துமே பாட்டி கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் காவிரி- கங்கா இருவருமே ரொம்ப எமோஷனலாக குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த குமரன், விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார். அதற்கு காவிரி, நீ எதையும் யோசி யோசிக்காதே. விஜயால் என்னை பார்க்காமல் இருக்க முடியாது. கண்டிப்பாக வந்து விடுவார் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் காவிரி அனுப்பிய மெசேஜை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் காலையில் காவேரி, விஜய்க்கு போன் மேல் போன் செய்தார். கோபத்தில் விஜய் போன் எடுக்கவில்லை. அதற்கு பின் போன் எடுத்த விஜய், என்ன பிரச்சனை என்றார். அப்போது காவிரி, ஏன் மெசேஜை பார்த்து எனக்கு போன் செய்யவில்லை என்று கேட்டார். விஜய், எதற்காக பண்ணனும் என்று கேட்டார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் காவிரி, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு விஜய், நான் எவ்வளவோ உனக்காக விட்டுக் கொடுத்து விட்டேன். நான் உன்னை விட்டு ரொம்ப தூரம் சென்று விட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். இதனால் காவேரி ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே விஜய், காவிரியின் வீட்டிற்கு வந்து விட்டார். அதை பார்த்தவுடன் காவிரி ரொம்ப சந்தோசப்பட்டார். அப்பொழுது காவிரி அம்மா, பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு குழந்தையை கொடுப்பது நியாயமா? நானே என் மகளை தப்பாக நினைத்து விட்டேன் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
அதற்கு விஜய், நாங்கள் இருவரும் மனதார கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்த பிறகு தான் காவிரியின் வயிற்றில் குழந்தை வந்தது. நாங்கள் இருவருமே நேசிக்கிறோம். என்னால் காவிரியை விட்டுக் கொடுக்க முடியாது என்றெல்லாம் பேசினார். இதைக் கேட்டு காவிரி அம்மா சந்தோஷப்பட்டார். இருந்தாலும் விஜயின் வீட்டில் பேசியதை வைத்து காவேரி அம்மா வருத்தப்பட்டார். விஜய், என்ன நடந்தது. உண்மையை சொல்லுங்கள் என்றார். உடனே காவிரியின் அம்மா, விஜயின் பாட்டி, சித்தி இருவருமே வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்ட என அனைத்து விஷயத்தையும் சொன்னார். இதைக் கேட்ட விஜய் ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னுடைய பாட்டி,சித்தி செய்த வேலையை நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் விஜய், வீட்டில் சரி செய்துவிட்டு நான் காவிரியை அழைத்து செல்கிறேன் என்று அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு பக்கம் விஜயின் சித்தப்பா வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்து தாத்தா கோபப்பட்டு சண்டை போடுகிறார். அந்த சமயம் வந்த விஜய், தன்னுடைய சித்தப்பாவை பார்த்து அவரை அடித்து வெளியே அனுப்புகிறார். உடனே பாட்டி, சித்தி இருவருமே விஜய்யை தடுத்து மன்னிப்பு கேட்டு அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள சொல்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது விஜய், எல்லோருமே என் முதுகில் குத்துகிறார்கள் என்று சொல்கிறார். பின் காவிரி இடம் விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி விஜய் கேட்கிறார். கோபத்தில் பாட்டி, ஆமாம் நான்தான் அதை சொன்னேன். உன் வாழ்க்கை சீரழிவுதே என்னால் பார்க்க முடியாது என்று சொல்கிறார். உடனே விஜய், நான் காவிரி விவாகரத்து கொடுத்தாலும் நான் கொடுப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள் என்று கோபப்பட்டு பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.