ராகினியை வீட்டை விட்டு வெளியேற்றிய விஜய், காவிரியை சந்தித்த நிவின் - மகாநதி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் விஜயின் வீட்டிற்கு வந்த வெண்ணிலாவின் மாமா, நாளைக்கு உங்களுக்கு கோயிலில் கல்யாணம். வந்து விடுங்கள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபத்தில் விஜய் அவரை அடிக்கப் போனார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் தடுத்து விட்டார்கள். அவரும் பயந்து அங்கிருந்து ஒடி விட்டார். இன்னொரு பக்கம் வெண்ணிலா, காவிரியின் வீட்டிற்கு சென்று ரொம்ப மோசமாக அவருடைய குடும்பத்தையும், காவிரியையும் பற்றி பேசி இருந்தார். இதை தாங்கிக் கொள்ளாமல் காவிரியின் வீட்டில் உள்ளவர்களும் வெண்ணிலாவை திட்டி இருந்தார்கள்.
அப்போது வெண்ணிலா, நாளை என் திருமணத்தில் நீங்கள் ஏதாவது பிரச்சனை செய்தாள் மொத்த குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவிரி குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட காவிரியின் அம்மா விஜய்க்கு போன் செய்து வெண்ணிலா வீட்டில் வந்து செய்த ரகளை எல்லாம் சென்றார். அதோடு நீங்கள் காவிரிக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டார். விஜய்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை, ரொம்ப கஷ்டப்பட்டார். இன்னொரு பக்கம் காவிரி தன்னுடைய அப்பளம் பிசினஸில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் விஜய், காவேரி வீட்டிற்கு சென்று அவருடைய அம்மாவிடம் பேசி இருந்தார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே தயவு செய்து காவேரிக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள். எங்களுக்கு இந்த அசிங்கம் தேவையில்லை என்று திட்டி அனுப்பி விட்டார்கள். அதற்குப்பின் விஜய், காவிரியை சந்தித்து பேசி இருந்தார். அதற்கு காவிரி, எத்தனை வருடமானாலும் நான் உங்களுக்காக காத்திருப்பேன். ஆனால், எங்க அம்மாவை மீறியும் வரமாட்டேன். நீங்கள் வெண்ணிலா பிரச்சனையை முடித்து விடுங்கள். நான் எங்கள் வீட்டில் பேசுகிறேன் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
அப்போது வந்த பிரஸ்மீட், விஜய் இடம் வெண்ணிலாவை கல்யாணம் செய்வது பற்றி பேசி இருந்தார்கள். அதற்கு விஜய், என்னுடைய மனைவி காவிரி தான். வெண்ணிலாவை நான் கல்யாணம் செய்ய மாட்டேன்.
தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று அங்கிருந்து அவர்களை அனுப்பி விட்டார்கள். இதை எல்லாம் அந்த மீடியா டிவியில் போட்டு விட்டார்கள். இதை பார்த்து விஜய்க்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் அவர் ராகினியை அழைத்து விசாரித்தார். அப்போது ராகினி, எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார். அதற்கு விஜய் கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், அஜய்யை அழைத்து வெண்ணிலா விஷயமாக பேசுகிறார். ஆனால், அஜய் எனக்கு எதுவுமே தெரியாது என்று டிராமா போடுகிறார். கோபத்தில் விஜய், இதுவரை நீங்கள் இந்த வீட்டில் செய்தவரையும் போதும், வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள் என்று சொன்னவுடன் ராகினி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். ரொம்ப ஏளனமாக விஜய்யும், அவர் குடும்பத்தையும் பேசுகிறார். பின் விஜய், தாத்தா, பாட்டி மூவருமே சேர்ந்து அஜய்- ராகினி இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் நிவின், காவிரியை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது நிவின், விஜய் தன்னிடம் பேசிய விஷயமெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு காவிரி, சீக்கிரமாகவே எங்கள் பிரச்சனை தீர்ந்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து கங்கா- யமுனா இருவருமே அந்த இடத்திற்கு வருகிறார்கள். அங்கு நிவினை பார்த்தவுடன் யமுனா பயங்கரமாக கோபப்படுகிறார். அப்போது காவிரி, தனக்கு புது ஆர்டர் கிடைத்தது பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார். ஆனால், யமுனா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காவிரி மீது தான் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் பசுபதி, வெண்ணிலாவை அழைத்து விஜயை திருமணம் செய்து கொள்ளுவது பற்றி தேவையில்லாமல் அவருக்கு யோசனை தருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.