ஆக்ரோஷமாக விஜய்யிடம் சவால் விடும் வெண்ணிலா, திருமணம் நடக்குமா? பரபரப்பில் மகாநதி சீரியல்

By subhashini · 14/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் வெண்ணிலா, என் புருஷனை மயக்கி திருமணம் செய்து விட்டாய். ஆனால், உங்களுடைய காண்ட்ராக்ட் திருமணமே முடிந்துவிட்டது. பணத்துக்காக இப்படி எல்லாம் செய்வாயா? மரியாதையாக விஜய்க்கு விவாகரத்து கொடுத்து விட்டு செல். நானும் விஜய்யும் கூடிய சீக்கிரமே கல்யாணம் செய்யப்போகிறோம் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். கூலாக காவிரி, விஜய் எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரி. நீங்கள் எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் தான் கேட்கணும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அவ்வளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் எதற்கு என்னிடம் பேசுகிறீர்கள் என்று பதில் சொல்லிவிட்டு சென்றார்.

நேற்று எபிசோட்டில் விஜயின் வீட்டிற்கு வந்த வெண்ணிலாவின் மாமா, நாளைக்கு உங்களுக்கு கோயிலில் கல்யாணம். வந்து விடுங்கள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபத்தில் விஜய் அவரை அடிக்கப் போனார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் தடுத்து விட்டார்கள். அவரும் பயந்து அங்கிருந்து ஒடி விட்டார். இன்னொரு பக்கம் வெண்ணிலா, காவிரியின் வீட்டிற்கு சென்று ரொம்ப மோசமாக அவருடைய குடும்பத்தையும், காவிரியையும் பற்றி பேசி இருந்தார். இதை தாங்கிக் கொள்ளாமல் காவிரியின் வீட்டில் உள்ளவர்களும் வெண்ணிலாவை திட்டி இருந்தார்கள்.

மகாநதி சீரியல்:

அப்போது வெண்ணிலா, நாளை என் திருமணத்தில் நீங்கள் ஏதாவது பிரச்சனை செய்தாள் மொத்த குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவிரி குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட காவிரியின் அம்மா விஜய்க்கு போன் செய்து வெண்ணிலா வீட்டில் வந்து செய்த ரகளை எல்லாம் சென்றார். அதோடு நீங்கள் காவிரிக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டார். விஜய்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை, ரொம்ப கஷ்டப்பட்டார். இன்னொரு பக்கம் காவிரி தன்னுடைய அப்பளம் பிசினஸில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் விஜய், காவேரி வீட்டிற்கு சென்று அவருடைய அம்மாவிடம் பேசுகிறார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே தயவு செய்து காவேரிக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள். எங்களுக்கு இந்த அசிங்கம் தேவையில்லை என்று திட்டி அனுப்பி விடுகிறார்கள். அதற்குப்பின் விஜய், காவிரியை சந்தித்து பேசுகிறார். அதற்கு காவிரி, எத்தனை வருடமானாலும் நான் உங்களுக்காக காத்திருப்பேன். ஆனால், எங்க அம்மாவை மீறியும் வரமாட்டேன். நீங்கள் வெண்ணிலா பிரச்சனையை முடித்து விடுங்கள். நான் எங்கள் வீட்டில் பேசுகிறேன் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த பிரஸ்மீட், விஜய் இடம் வெண்ணிலாவை கல்யாணம் செய்வது பற்றி பேசுகிறார்கள். அதற்கு விஜய், என்னுடைய மனைவி காவிரி தான். வெண்ணிலாவை நான் கல்யாணம் செய்ய மாட்டேன்.
தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று அங்கிருந்து அவர்களை அனுப்பி விடுகிறார்கள். இதை எல்லாம் அந்த மீடியா டிவியில் போட்டு விடுகிறார்கள். இதை பார்த்து விஜய்க்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. பின் அவர் ராகினியை அழைத்து விசாரிக்கிறார். அப்போது ராகினி, எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார். அதற்கு விஜய் கோபப்படுகிறார்.

https://www.youtube.com/watch?v=boDf6ndIdlY

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வெண்ணிலா, விஜய் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார். அப்போது விஜய், நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். என்னுடைய மனைவி காவிரி தான். இங்கிருந்து கிளம்பு என்று கோபப்படுகிறார். அதற்கு வெண்ணிலா, நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நாளைக்கு உனக்கும் எனக்கும் கோயில் திருமணம் நடக்கும். நீயே இந்த வீட்டிற்கு என்னை அழைத்து வருவாய் என்று சவால் விட்டு செல்கிறார். பின் கோயிலில் வெண்ணிலா விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full