முத்துமலர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் சித்தி, கொந்தளித்த சாரதா - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, இனிமேல் உங்களை கஷ்டப்படுத்தாமல் எல்லா பிரச்சினையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு விஜய், நாம் இருவரும் கணவன்- மனைவி. எந்த பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து சமாளிக்கலாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கு. இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி காவிரியை சமாதானம் செய்து தூங்க வைத்தார்.
முத்து மலர், என்ன பண்றீங்க அக்கா? என்று கூப்பிட்டார். இதனால் கொந்தளித்த சாரதா சண்டைக்கு போனார். இதையெல்லாம் பார்த்து விஜயின் பாட்டி திட்டினார். பின் காவிரி தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்தார். இருந்தாலுமே முத்துமலர் வேண்டும் என்று அக்கா என்று கூப்பிட்டு சாரதாவை வம்புக்கு இழுத்தார். இதனால் கொந்தளித்த சாரதா, முத்து மலரை திட்டி அனுப்பி வைத்தார். அதற்குப்பின் விஜய், கிருஷ்ணாவிடம் அவர்களுடைய பேக்ரவுண்டை பற்றி விசாரித்தார்.பின் விஜய், எனக்கு உங்கள் சூழ்நிலை புரிகிறது.
மகாநதி:
அந்த வீட்டை ஆறாக பங்கு போட்டு ஐந்து பங்கு காவிரி வீட்டிற்கு, ஒரு பங்கு உங்களுக்கு என்றார். இதனால் கோபப்பட்ட கிருஷ்ணா ஒத்துக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் தன்னுடைய அம்மா, தங்கையிடம் கிருஷ்ணா சொன்னார். அவர்களுமே வந்த வரை போதும் கிளம்பி விடலாம் என்றார். ஆனால், கிருஷ்ணா ஒத்துக்கொள்ளவே இல்லை. சரி பாதியாக பங்கு போட வேண்டும் என்றார்.இன்னொரு பக்கம் காவேரி பாட்டு கேட்டு கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய விஜய், முத்து மலர் குடும்பம் தங்குவதற்காக ரூமை ஏற்பாடு செய்து தர சொல்கிறார். இதை கேட்ட விஜயின் சித்தி, நான் சொல்லும் இடத்தை காட்டு என்று வேலைக்காரிடம் சொல்கிறார். மோசமாக இருக்கும் ரூமில் முத்துமலர் குடும்பத்தை தங்க சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து சிந்து பயங்கரமாக அழுகிறார். கோபத்தில் கிருஷ்ணா, இங்கு எப்படி தங்க முடியும்? என்று கேட்கிறார். அதற்கு விஜயின் சித்தி, முத்துமலர் குடும்பத்தை திட்டி அவமானப்படுத்தி விட்டு செல்கிறார். வேறு வழியில்லாமல் முத்து மலர் குடும்பம் அங்கேயே தங்கி விடுகிறது.
சீரியல் ட்ராக்:
அதற்குப் பின் முத்துமலர், அக்கா என்று கூப்பிட்டு பேசுகிறார். கோபத்தில் சாரதா மீண்டும் சண்டை போடுகிறார். உடனே காவிரி, கங்கா இருவரும் தடுத்து விடுகிறார்கள். அதற்குப்பின் விஜய் வீட்டிற்கு வருகிறார். அப்போது சாரதா, முத்துமலர் குடும்பத்தை: திட்டிக் கொண்டிருக்கிறார். விஜயுமே ஆறுதல் சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து விஜயின் பாட்டி, சித்தி இருவரும் கோபப்படுகிறார்கள். சாராத குடும்பத்தை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.