தனி தனியாக தங்கள் வாழ்க்கை பாதையில் செல்லும் விஜய்-காவிரி, விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 12/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் கண் விழித்தவுடன் காவிரியும் குழந்தையும் பற்றி தான் விசாரித்தார்கள். பாட்டி கல்யாணி உண்மையை சொல்லாமல் காவிரி நன்றாக இருந்தார். அப்புறமாக பார்க்கலாம் என்று சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் காவேரி சென்று கொண்டிருக்கும் போது தன்னுடைய அப்பாவை பற்றியும் சென்னைக்கு வந்ததைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.

சாரதா, காவிரியிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம் என்றார். காங்கா, அதெல்லாம் வேண்டாம். உண்மை தெரிந்தால் காவிரியால் சந்தோஷமாக இருக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இன்னொரு பக்கம் விஜய், ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த விஜய், காவிரியை பற்றி கேட்டார். இருந்தாலும் பாட்டி எதுவும் சொல்லாமல் விஜயை கோயிலுக்கு அழைத்து சென்று பூஜை எல்லாம் செய்தார்.

மகாநதி:

மீண்டும் விஜய், காவிரி பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார். உடனே கல்யாணி அழுது டிராமா செய்தார். சித்தப்பா, காவிரி இறந்து விட்டாள் என்று சொன்னார். இதைக் கேட்ட விஜய் உடைந்து போய் கதறி அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்க்கு ஆறுதல் சொன்னார்கள். பின் சித்தி, குழந்தையை கொண்டு வந்து விஜய் இடம் கொடுத்தார். குழந்தையை பார்த்து விஜய் எமோஷனலாக அழுதார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் 5 வருடங்களுக்கு பிறகு காண்பிக்கிறார்கள். விஜய் தன்னுடைய மகளுக்கு காவிரி என்று பெயரும் வைத்திருக்கிறார். குழந்தை காவிரியின் ஐந்தாவது பிறந்தநாள் என்பதால் வீட்டில் எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விஜய்யின் தாத்தா வந்தவுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அதற்கு பின் கோவிலுக்கு விஜய், தாத்தா, குழந்தை காவிரி எல்லோருமே போகிறார்கள். இன்னொரு பக்கம் காவேரி தன்னுடைய அக்கா மகளுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

கங்கா, குமரனுடன் கொடைக்கானலில் சொந்தமாக கடை நடத்தி வாழ்ந்து வருகிறார். கங்கா குழந்தையை அழைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு போகிறார். அந்த சமயம் வந்த யமுனா கலெக்டர் தேர்வில் பாஸ் ஆனதால் போஸ்டிங் கிடைத்ததாக சொல்லி சந்தோஷப்படுகிறார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் கோவிலில் குழந்தை காவிரியின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய். அப்போது தாத்தா, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கல்யாணி இறந்துவிட்டார். விஜய் தன் மனைவி இறந்ததால் பிசினஸை விட்டு காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எமோஷனலாக பேசுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full