விஜய்க்கு எதிராக திரும்பும் ஆதாரங்கள், உண்மையை நிரூபிப்பாரா காவிரி? விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 21/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், வெண்ணிலாவுக்கு ஆபத்து. நான் ஹாஸ்பிடல் போகிறேன் என்று சொன்னார். அதற்குள் பசுபதியின் ஆட்கள் வெண்ணிலாவை தாக்க வர, காவிரி விரட்டி அடித்தார். பின் அந்த இடத்திற்கு போலீஸ் வந்தது. கொந்தளித்த காவிரி, உயர் அதிகாரி வரும் வரை இங்கிருந்து போக மாட்டேன். வெண்ணிலாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஹாஸ்பிடலில் இருந்தார். காவிரிக்கு துணையாக நிவினும் அங்கே இருந்தார். இன்னொரு பக்கம் யமுனா வீட்டிற்கு நிவின் வரவில்லை என்று கோபப்பட்டு கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நிவின், காவிரியை வீட்டுக்கு போக சொல்ல, காவிரி மறுத்தார்.

குமரனுக்கு போன் செய்த கங்கா, வெண்ணிலாவின் மாமாவை கண்டுபிடித்து விட்டீங்களா? என்று கேட்டார். அதற்கு குமரன், சென்னையில் தான் இருக்கிறார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு வந்த போலீஸ், காவிரியை பார்த்தவுடன் எதற்காக இங்கு இருக்கிறாய்? என்று கத்தினார். உடனே காவிரி, நடந்ததை எல்லாம் சொன்னார். இருந்தாலுமே போலீஸ் காவிரியை நம்பவில்லை. அதற்குப்பின் கண்விழித்த வெண்ணிலா, கோர்ட்டுக்கு போகலாமா? என்று கேட்டார். அதற்கு அந்த நர்ஸ், உங்களை கோர்ட்டுக்கு போலீஸ் அழைத்து செல்லும் மாதிரி தெரியவில்லை என்றார்.

மகாநதி:

அந்த சமயம் பார்த்து காவிரி, நர்ஸ் கெட்டபில் ஸ்கேன் எடுக்கணும் என்று வெண்ணிலாவை அழைத்துப் போனார். போலீசுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. இன்னொரு பக்கம் பசுபதியை மண்டையில் அடித்து கீழே தள்ளுகிறார் நிவின். உடனே அங்கிருந்த பசுபதி ஆட்கள் நிவினை கட்டி போட்டு விட்டார்கள். இருந்தாலுமே கயிறை அறுத்து அறுத்துவிட்டு ராகினியின் கழுத்தில் கத்தியை வைத்து பசுபதியை மிரட்டினார் நிவின். இன்னொரு பக்கம் குமரன், பசுபதி ஆட்கள் எல்லாம் அடித்து விட்டு வெண்ணிலாவின் மாமாவை காப்பாற்றுகிறார். அதோடு வெண்ணிலாவுக்கு இருக்கும் ஆபத்தை பற்றியும் எடுத்து சொல்வதால் வெண்ணிலா மாமா உண்மையை கோர்ட்டில் சொல்வதற்காக கிளம்பினார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் காவேரி, போலீஸ் உன்னை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் எண்ணமே இல்லை. பசுபதி ஆட்களும் உன்னை கொல்ல காத்துக் கொண்டிருந்தார்கள். என்னை நம்பு நான் உன்னை அழைத்து செல்கிறேன் என்று சொன்னார். இதனால் வெண்ணிலாவுமே காவிரியின் பேச்சை கேட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் கோர்ட்டுக்கு விஜய்யை அழைத்து வந்தார்கள். அப்போது விஜய்யை பார்த்த தாத்தா, பாட்டி ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார்கள். கோர்ட்டில் விஜயின் எதிர் தரப்பு வக்கீல், விஜய் கிடைக்கவில்லை என்றால் வெண்ணிலா தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசிய வீடியோவை காண்பித்தார்.

சீரியல் ட்ராக்:

உடனே விஜய் தரப்பு வக்கீல், விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று வெண்ணிலா சொன்ன விஷயத்தை காண்பித்தார்கள். இரு தரப்பில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் காவேரி வெண்ணிலாவை அழைத்து வருவதை பசுபதி ஆட்கள் பார்த்துவிட்டு துரத்தினார்கள். காவிரி, வெண்ணிலா இருவருமே தப்பித்து ஓடினார்கள். ஒரு வழியாக பசுபதியின் ஆட்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு காவிரியை வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு வந்தார். கோர்ட்டிலுமே விஜய் பக்கம் நிரூபிக்க ஆதாரம் வேண்டும் என்று சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் பசுபதியை விஜய், குமரன், நிவின் மூவருமை அடித்த வீடியோவை சமர்ப்பிக்கிறார்கள். விஜய்க்கு எதிராகவே ஆதாரம் எல்லாம் இருக்கிறது. அதற்குப்பின் கோர்ட்டுக்கு வந்த நிவின், பசுபதியை நான் கோர்ட்டுக்கு தான் அழைத்து வந்தேன். ராகினி டிராமா போட்டு தப்பித்து விட்டார்கள் என்கிறார். வெண்ணிலா சுயநினைவுக்கு வந்தாரா? என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். பின் குமரன் கோர்ட்டுக்கு வருகிறார். அப்போது அவரும் வெண்ணிலாவின் மாமாவை அழைத்து வர முடியவில்லை என்று புலம்புகிறார். என்ன செய்வதென்று புரியாமல் விஜய் தவித்து கொண்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full