ராகவை கடத்தி வைத்து அட்ராசிட்டி செய்யும் மூன்று சகலைகள், பசுபதி என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரன் தன்னுடைய வேலையை செய்தார். ஆனால், விஜயால் குமரனை தன்னுடைய அம்மா மரியாதையாக நடத்தவில்லை என்று நினைத்துக் கொண்டு கங்கா கோபப்பட்டு குமரனிடமும் சண்டை வாங்கினார். அதற்கு குமரன், விஜய் புதிதாக வந்தவர். அதனால் தான் அத்தை கவனித்தார். நான் சின்ன வயதிலிருந்து அவர்களிடம் வளர்ந்தவன். நீ அதை எல்லாம் யோசிக்காதே என்றார். இருந்தாலுமே கங்கா கேட்கவில்லை, குமரனை தான் திட்டிக் கொண்டு இருந்தார். சாரதாவிற்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால் காவேரி, தெரியாமல் நீவி விட்டுக் கொண்டிருந்தார்.
அதனால் சாரதா வலி தாங்க முடியாமல் கத்தினார். உடனே விஜய், சாரதாவிற்கு சுளுக்கு எடுத்துவிட்டு நன்றாக நடக்க வைத்தார். விஜய் செய்த செயலை பார்த்து சாரதா கண்கலங்கி விட்டார். அதற்குப்பின் நிவின்,விஜய், குமரன் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜய் கொடைக்கானல் வீட்டு பத்திரத்தை எப்படியாவது மீட்டு அத்தை இடம் தர வேண்டும். அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பசுபதி மகன் ராகாவை தூக்கி விட்டால் பத்திரத்தை எடுத்து விடலாம்
என்றெல்லாம் சொன்னார்.
மகாநதி:
இதைக் கேட்டு நிவின், குமரன் இருவருமே ஒத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கங்கா, யமுனா ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வழக்கம்போல் இருவருமே விஜய், காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து யமுனாவின் வீட்டிற்கு நிவின் அம்மா வந்து விட்டார். ஆனால், யமுனா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால் நிவின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சாரதா, விஜய், காவிரி மூவருமே நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின் விஜய்- குமரன் இருவருமே தனியாக நின்று பேசுவதை பார்த்து கங்கா கோபப்பட்டார். அதைப்பற்றி கங்கா, காவிரியிடமும் கேட்டார். ஆனால், காவேரி எதுவும் தெரியாது என்றார். இன்னொரு பக்கம் ராகவை நிவின் அம்மா அழைத்து வந்தார். அப்போது நிவின் தன்னுடைய அம்மாவை வேறு ஒரு காரில் அனுப்பி ராகவை தூக்கி விட்டார். விஜய் இருக்கும் இடத்திற்கு ராகவை அழைத்துக் கொண்டு நிவின்-குமரன் இருவருமே வந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராகவை வைத்து மூன்று மருமகள் சகலைகளையும் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ராகவ் போன் செய்யவில்லை என்று பசுபதி புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து நிவின், பசுபதிக்கு போன் செய்து ராகவை கடத்திய விஷயத்தை சொல்கிறார். இதனால் பசுபதி பயங்கரமாக கோபப்பட்டு கத்துகிறார். உடனே விஜய், காவிரி குடும்பத்திற்கு நீ பிரச்சனை தரக்கூடாது என்று சொல்லியும் நிறைய பிரச்சனை கொடுத்திருக்கிறார். ஒழுங்கு மரியாதையாக கொடைக்கானல் பத்திரத்தை நீ எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரவேண்டும் இல்லை என்றால் உன் மகனை என்ன செய்வோம் என்று எங்களுக்கே தெரியாது என்று மிரட்டுகிறார். இதனால் பசுபதி ரொம்பவே பதறிப் போகிறார்.