கிருஷ்ணாவின் சுயரூபத்தை அறிந்த விஜய், குமரனின் நிலை என்ன? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியின் வளைகாப்பிற்காக விஜய் சூப்பராக ஏற்பாடு செய்திருந்தார். அதை பார்த்து காவேரி அசந்து போய்விட்டார். பின் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. விஜயின் குடும்பத்தார், உற்ற உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே விழாவிற்கு வந்தார்கள். காவிரி ரொம்ப அழகாக தயாராகி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே காவிரி- விஜய் நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். சாரதா, தன் கணவர் இந்த நேரத்தில் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டார். பின் நல்லபடியாக வளைகாப்பு விழா துவங்குகிறது. காவிரியின் அழகை கண்டு விஜய் ரசித்துக் கொண்டிருந்தார்.
கோலாகலமாக காவிரியின் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் விஜய் தங்களுடைய குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று போர்டில் எல்லோரையும் எழுத சொன்னார். பின் விஜய், இதிலிருந்து ஒரு பெயரைதான் எங்கள் குழந்தைக்கு வைக்கப் போகிறோம் என்று வாக்குறுதியும் கொடுத்தார். அதற்குப்பின் கிருஷ்ணா, பில்டிங் மேப் ஒன்றை காண்பித்தார். அதை விஜய் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நம்பரில் இருந்து போன் வருகிறது.
மகாநதி:
உடனே கிருஷ்ணா வெடுக்கு என்று போனை பிடுங்கி விட்டார். இதனால் விஜய்க்கு சந்தேகம் வந்தது. அதற்குப்பின் கிருஷ்ணா,தன்னுடைய அம்மா, தங்கை இருவரையும் சந்தித்து, நாம் இங்கு எதற்காக வந்தோம்? யார் சொல்லி இங்க வந்தோம்? ஆனால், நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். காவிரிக்கு வளையல் போடுவது தான் நம்ம வேலையா? சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டு போகணும் என்று தன்னுடைய சுய ரூபத்தை காண்பித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்ததை பற்றி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜய் போன் வந்ததால் வெளியே வருகிறார். அங்கு கிருஷ்ணா ஒரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை விஜய் கவனிக்கிறார். அந்த நபர் வேறு யாருமில்லை பசுபதியின் மகன் ராகவ் தான். அதை பார்த்தவுடன் விஜய்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. ஆனால், விஜய் அதைப் பற்றி பேசவில்லை. பின் காவிரி வந்தவுடன் விஜய் அமைதியாகி விடுகிறார். மறுநாள் காலையில் விஜய்- காவேரி வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது கிருஷ்ணாவை பார்த்த விஜய், உங்களுக்கு இந்த ஊரில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? நேற்று நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
கிருஷ்ணா நான் யாருடனும் பேசவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். விஜய், நான் தான் சரியாக கவனிக்கவில்லை என்று அமைதியாகி விடுகிறார். அதற்கு பின் காவிரியிடம் விஜய், கிருஷ்ணா மீது ஒரு கண் வைக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் நிவினை சந்தித்து குமரன் விஷயமாக விஜய் பேசுகிறார். அப்போது நிவின், குமரன் அண்ணா மலேசியாவில் இருந்து துபாய் போகவே இல்லை. மலேசியாவில் அவர் வேலை செய்யும் ஆட்களுடன் சண்டை ஏற்பட்டு சென்னைக்கு கிளம்பி இருக்கிறார். ஆனால், அவர் வீட்டிற்கு வரவில்லை. குமரன் அண்ணா என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார்? என்று புரியவில்லை என்கிறார். இதை கேட்டு விஜய்க்கு அதிர்ச்சியாக இருக்கிறது.