காவிரியை விட்டு பிரிய நினைக்கும் அம்மு - விஜய், உடைந்து போன சாரதா - பரபரப்பில் மகாநதி

By subhashini · 15/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் வாக்கிங் முடித்துவிட்டு வரும்போது வீட்டில் அம்மு இல்லை.எல்லா இடத்திலேயுமே தேடிப் பார்த்தார். ஆனால், அம்மு- காவிரியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். விஜய், அம்முவை தேடி அலைந்து கொண்டிருந்தார். அம்மு, காவேரி வீட்டிற்கு வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வந்த நிவின், அமுவை பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தார். விஜய் இடம் நடந்தது எல்லாம் நிவின் சொன்னார். விஜயும் அம்முவை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் நிவின் காவிரியிடம் அம்மு செய்த விஷயத்தை பற்றி சொன்னார்.

சாரதா, இதற்கெல்லாம் காரணம் நீதான். நீ விஜயை கல்யாணம் செய்து கொண்டால் இந்த பிரச்சனை இல்லை என்றார். இதனால் கொந்தளித்த காவிரி, எதற்காக மொத்த குடும்பமே விஜய்க்கு சப்போர்ட் செய்கிறீர்கள். என்னுடைய விருப்பத்தை பார்க்க மாட்டீர்களா? என்றார். சாரதா, தெரியாத ஒருத்தனை திருமணம் செய்து கொள்வதற்கு பதில் விஜய்யை செய்து கொள். விஜய் தம்பி ரொம்ப நல்லவர். உன்னை நன்றாக பார்த்துக் கொள்ளுவார் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் கொந்தளித்த காவிரி, என்னை புரிந்து கொள்ளாத இந்த குடும்பம் எனக்கு தேவையில்லை என்று சண்டை போட்டு அங்கிருந்து கிளம்பி போனார்.

மகாநதி:

பின் விஜய், காவிரி இருவரும் பேசிக் கொண்டார்கள். காவிரி, குழந்தையை வைத்து டிராமா போடுகிறீர்களா? நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தான் இப்படி எல்லாம் செய்கிறீர்களா? என்று மோசமாக பேசி இருந்தார். நீங்கள் யாரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் உங்களிடம் திருமணத்தை பற்றியும் என் குழந்தையை பற்றியும் பேசமாட்டேன் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் அம்மு வரவில்லை. காவேரி, அம்முவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு காவிரியை தவிர எல்லோருமே சென்றிருந்தார்கள். அம்முவுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். விஜய், காவிரி சொன்னதை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் விஜய், காவிரி தன்னிடம் சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். அதைக் கேட்டு சாரதா, கங்காவிற்கு ஷாக்கிங்காக இருக்கிறது. விஜய், இனிமேல் நான் உங்கள் மகள் விஷயத்தில் தலையிட மாட்டேன். நானும் அம்முவும் உங்கள் வீட்டிற்கு வர மாட்டோம். நீங்களும் எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இதனால் சாரதாவிற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. சாரதா, காவிரி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார். இருந்தாலும் விஜய் எதுவும் பேசாமல்
இருக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு போன சாரதா, விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் தன்னுடைய மகள்கள், நிவினிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதோடு காவிரி வீட்டிற்கு வராததை நினைத்து சாரதா கவலைப்படுகிறார். இன்னொரு பக்கம் கோவிலில் காவேரி, விஜயிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் அம்முவை சந்திக்க காவிரி வீட்டிற்கு போகிறார். அப்போது விஜயின் சித்தி ராதா, எதற்காக இங்கே வந்தாய் என்று கடுமையாக நடந்து கொள்கிறார். பின் தாத்தா, ராதாவை திட்டி காவிரியை உள்ளே போக சொல்கிறார். காவேரி- அம்மு இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அம்மு, நீங்கள் என் அப்பாவை கல்யாணம் செய்துகொண்டு என்னுடனே இருங்கள் என்று எமோஷனாக பேசினார். அதை விஜய் கேட்டு விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full