பிரச்சனையில் சிக்கி கொண்ட விஜய், வேதனையில் தவிக்கும் கங்கா - பரபரப்பில் மகாநதி

By subhashini · 19/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ஆபீஸிலிருந்து விஜய் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விசாரித்தார். சாரதா- முத்து மலர் இரண்டு குடும்பமே மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டார்கள். இதை பார்த்து விஜயின் தாத்தா, பாட்டி இருவரும் கோபப்பட்டார்கள். கடைசியில் விஜய், நீங்கள் இந்த வீட்டில் யாரும் பிரச்சினை செய்ய வேண்டாம். யாராக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று விடுங்கள் என்றார். இதை கேட்டு காவிரி சாக்காகினார்.

சித்தப்பா செய்த சூழ்ச்சியால் வீட்டில் பெரிய கலவரம் நடந்திருப்பது விஜய்க்கு தெரிந்து விடுகிறது. பின் விஜய், கிருஷ்ணா தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை. தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டாம். இருந்தாலுமே முத்து மலர் குடும்பம் கெஸ்ட் ஹவுஸில் இருக்கட்டும். நீங்கள் இந்த பிரச்சினையை விடுங்கள் என்று எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ஆபீஸில் கன்ஸ்டிரக்ஷன் வேலை முழுவதுமாக முடியாததால் கஸ்டமர் எல்லோருமே பிரச்சினை செய்து கொண்டிருந்தார்கள். இதை விஜய் இடம் சொல்ல வேண்டும் என்று ஆபீஸில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

மகாநதி:

அந்த சமயம் வந்த சித்தப்பா, இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். விஜயிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று மீண்டும் சதி செய்ய திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் குமரனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விஜய்-நிவின் இருவருமே கவலைப்பட்டார்கள். அதற்கு நிவின், நான் உடனே அங்கு சென்று என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து சொல்கிறேன். நீங்கள் இங்கிருக்கும் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். விஜய்யும் நிவின் சொல்வதை ஏற்றுக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஏழாவது மாதம் செக்கப்பிற்காக விஜய்- காவேரி இருவரும் ஹாஸ்பிடலுக்கு செல்ல தயாராகி கிளம்புகிறார்கள். அப்போது பாட்டி, கங்காவும் உங்களுடன் வருகிறாரா? பிரசவத்திற்கு அவன் அப்பா வருவானா? நீதான் எல்லாமே செய்யணுமா? என்று கேட்கிறார். இதை கேட்டு சாரதா ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் விஜய், சாரதாவை சமாதானம் செய்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். முதலில் காவிரிக்கு செக்கப் செய்கிறார்கள். குழந்தையை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் கங்காவிற்கு செக் அப் செய்கிறார்கள். ஆனால், குமரன் தன்னுடன் இல்லாதது நினைத்து கங்கா ரொம்பவே அழுது புலம்புகிறார். இன்னொரு பக்கம் விஜய்யின் ஆபீஸில் கஸ்டமர்கால் எல்லோருமே தங்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை செய்து முடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். பின் விஜய்- காவேரி இருவரும் நேரடியாக ஆபீசுக்கு வருகிறார்கள். அங்கு கஸ்டமர்கள் பயங்கரமாக கலவரம் செய்து கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். அப்போது கஸ்டமர் கோபமாக நடந்தது எல்லாம் சொல்கிறார். இதை கேட்டு விஜய்- காவிரி இருவரும் ஷாக் ஆகிறார்கள். ஓரமாக நின்று சித்தப்பா சிரித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full