சிறையில் இருந்து வெளியே வந்த ராகவ், பயத்திலே இருக்கும் விஜய் - அடுத்து என்ன? மகாநதி

By subhashini · 29/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், இருவருக்கும் ஆறுதல் சொல்லி புரிய வைத்தார். இருந்தாலும் தாத்தா- பாட்டி இருவரும் விஜயை நினைத்து கவலைப்பட்டார்கள். அதற்குப்பின் பசுபதியால் மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதால் விஜய் தன்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்களை ஹாஸ்பிடலில் வரவைத்து காவிரியின் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க சொன்னார். சாரதா குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை சொன்னார். கங்கா, இன்னும் ஹாஸ்பிடலுக்கு வராததை நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் விஜய், நிவின் இருவரும் பசுபதியை தேடி போனார்கள்.

விஜய், நிவின் இருவருமே சென்னையில் பசுபதிக்கு இருக்கும் வீட்டைப் பற்றிய விவரங்களை சேகரித்தார்கள். எப்படியாவது கண்டுபிடிக்கணும் என்று இருவரும் தேடி அலைகிறார்கள். இவர்களுக்கு போலீஸ் ஒருவர் உதவி செய்தார். பின் ராகவ் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து இருவரும் சென்று விட்டார்கள். அங்கிருந்த ரவுடிகள் விஜய், நிவினை உள்ளே போகவிடாமல் வம்பு இழுத்தார்கள். கோபத்தில் விஜய் -நிவின் இருவரும் அவர்களை அடித்து விட்டு ராகவை தேடினார்கள். ஆனால், ராகவ் அங்கு இல்லை, தப்பித்து விட்டார்.

மகாநதி:

அதற்குப்பின் ராகவை தேடி இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது போலீஸ், ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பத்திரமாக இருக்கிறார்களா? என்று விஜய்- நிவின் இருவரும் போன் செய்து விசாரித்தார்கள். அப்போது விஜய் நடந்ததை எல்லாம் காவேரியிடம் சொன்னார். அதற்கு பின் ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை அறிந்து கொண்டார்கள் விஜய்-நிவின்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய்- நிவின் இருவரும் ராகவின் காரை பின்தொடர்ந்து செல்கிறார்கள். ஒரு வழியாக ராகவை பிடித்து நடு ரோட்டிலேயே விஜய்-நிவின் இருவரும் அடிவெழுத்து வாங்குகிறார்கள். அதற்குப்பின் போலீஸிடம் ராகவை ஒப்படைத்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் கங்கா கொஞ்சம் கொஞ்சமாக ரெக்கவர் ஆகி வருகிறார். சில மாதங்களுக்கு பிறகு விஜய்- நிவின் இருவரும் சந்தித்து பேசி கொள்கிறார்கள். அப்போது நிவின், ராகவ் பெயிலில் வெளியே வந்து விட்டான் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் விஜய் பதறிப் போகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் விஜய், காவிரியுடன் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும். நீங்கள் வீட்டில் எல்லோரையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். நிவின், விஜயின் வீட்டில் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்கிறார். இன்னொரு பக்கம் காவிரி, விஜய் இருவரும் ஹாஸ்பிடல் சென்று வந்த பிறகு ஓட்டலில் சாப்பிடுகிறார்கள். காவிரி சந்தோசமாக இருக்கிறார். ஆனால், விஜய் மட்டும் பிரச்சனை ஏதாவது வருமா? என்று பயந்து கொண்டு சுத்தி எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full