அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பற்றி அறிந்த விஜய், காவிரியின் ரகசியம் வெளிவருமா? மகாநதி

By subhashini · 24/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, அம்மாவின் படத்தை வரைந்து விட்டு சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அம்மு, தன்னுடைய அப்பாவை சந்திக்க சொல்லி கேட்டார். காவிரியும் ஒத்துக்கொண்டு இருவரும் நடந்து வந்தார்கள். அப்போது வேறொரு ஆசிரியர் அழைத்ததால் காவேரி அம்முவை போக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். பின் தன் அப்பாவை பார்த்த அம்மு, இன்னைக்கும் உங்களால் டீச்சரை சந்திக்க முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது என்றார். விஜய் நாளை சந்திக்கலாம் என்று பேசி இருந்தார்.

இப்படி அம்மு- விஜய் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை காவிரி ஓரமாக நின்று பார்த்தார். தன் கனவில் வந்தவர் போல விஜய் இருப்பதால் காவேரிக்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. இன்னொரு பக்கம் நிவின்- கங்கா- யமுனா எல்லோரும் கான்ஃபரன்ஸ் காலில் காவிரியை பார்க்க மாப்பிள்ளை வீட்டில் வருவதாக சொன்னார்கள். சாரதாவிற்கு என்ன சொல்வதே புரியவில்லை? சரி என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி தன் கனவில் வந்தவரை நேரில் பார்த்ததாக சொன்னார். சாரதா அமைதியாக இருந்தார். பின் சாரதா, உன்னை பெண்பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று சொன்னவுடன் காவேரி ஷாக் ஆனார்.

மகாநதி:

இன்றைய எபிசோட்டில் தன்னைப் பெண் பார்க்க வரும் விஷயத்தை அறிந்தவுடன் காவிரி, கங்காவிற்கு ஃபோன் செய்து சண்டை போடுகிறார். கங்கா, அவர்கள் உன்னை பார்க்கத்தான் வருகிறார்கள். உனக்கு விருப்பம் இல்லை என்றால் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் காவிரியும் கங்கா சொன்னது போல தயாராகி வருகிறார். பின் மாப்பிள்ளை வீட்டில் காவிரியை பிடித்து விடுகிறது. சீக்கிரமாகவே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் வருகிறது. பின் மாப்பிள்ளை வீட்டார் சென்றவுடன் காவேரி, சாரதாவிடம் சண்டை போடுகிறார். அதற்குப்பின் சாரதா ரோட்டில் வந்து கொண்டிருக்கும்போது விஜயின் சித்தப்பா அன்பரசு, சித்தி இருவரும் பார்த்து விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது சாரதா, தன்னுடைய பேத்தியை பற்றி விசாரிக்கிறார். கோபத்தில் அன்பரசன், அவர் வெளிநாட்டில் இருக்கிறார். நீங்கள் எங்கள் குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என்று திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் அம்மு விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து அடிபட்டு விடுகிறது. இதனால் காவேரி அவருக்கு முதலில் உதவி செய்து பார்த்துக்கொள்கிறார். பின் விஜய்க்கு போன் செய்த காவேரி, அம்முக்கு அடிபட்ட விஷயத்தை சொல்கிறார். காவிரி வாய்சை கேட்டவுடன் விஜய் உறைந்து போகிறார். பின் அம்முவுக்கு அடிபட்டதால் பள்ளிக்கூடத்திற்கு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

https://www.youtube.com/watch?v=_RJoxDdf77E

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அம்முவுக்கு காலில் அடிபட்டு இருப்பதால் காவேரி, விஜய்க்கு போன் செய்து சொல்கிறார். காவிரி குரலை கேட்டவுடன் விஜய் தடுமாறுகிறார். பின் பள்ளியிலிருந்து அம்முவை வீட்டிற்கு அழைத்து வந்த விஜய், காவிரியின் போட்டோவை காண்பிக்கிறார். அதை பார்த்த அம்மு, இவர்தான் என்னுடைய கிளாஸ் மிஸ் என்கிறார். அதிர்ச்சியான விஜய், தன்னுடைய தாத்தாவிடம் உண்மையாலுமே காவேரி இறந்துவிட்டாரா? என்று விசாரிக்கிறார். தாத்தாவும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full