கையும் களவுமாக விஜய்யிடம் சிக்கி கொண்ட முத்துமலர் குடும்பம், வெளிவருமா உண்மை? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கிருஷ்ணா செய்த வேலை எல்லாம் காவிரிக்கு தெரிய வந்தது. பின் இதைப் பற்றி கிருஷ்ணாவிடம் காவிரி கேட்கின்றார். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாமல் சென்று விட்டார். இன்னொரு பக்கம் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை எல்லாம் சாரதா குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் விஜய்- காவிரி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, வேலை செய்யும் இடத்தில் கிருஷ்ணா செய்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் விஜய்க்கு பயங்கர கோபம் வந்தது. பின் விஜய், இனிமேல் இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
விஜய்-காவிரி வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. எல்லோருமே பொங்கல் வைக்க தயாராகி வந்தார்கள். பின் கிராமத்து ஸ்டைலில் பொங்கல் வைத்து எல்லோரும் பண்டிகையை கொண்டாடினார்கள். அதற்குப்பின் விஜய் போட்டி வைத்தார். முதலில் கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. அதில் விஜய் அணி தான் வெற்றி பெற்றார்கள். இரண்டாவது ஆக பானை உடைக்கும் போட்டி நடக்கிறது. அதைப்பற்றி விஜய் விவரித்து கொண்டிருந்தார்.
மகாநதி:
உரியடிக்கும் போட்டியில் விஜய் வெற்றி பெற்று விட்டார். அதற்குப்பின் சேர் போட்டி நடந்தது. எல்லோருமே சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ணா, சேர் நகர்த்தி விடுவதால் காவேரி கீழே விழுந்து விட்டார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். கிருஷ்ணா, தெரியாமல் நடந்து விட்டது என்று சொன்னார். விஜய்க்கு கிருஷ்ணாவின் மீது பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் நிவினை சந்தித்த விஜய், கிருஷ்ணாவின் நடவடிக்கைகள் பற்றி எல்லாம் சொல்லி கண்காணிக்க சொன்னார்.
சீரியல் ட்ராக்:
நிவினும் சரி என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். கங்கா தன்னுடைய கணவர் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். யமுனா, கங்காவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் கிருஷ்ணாவை பின் தொடர்ந்து நிவின் சென்றார். அப்போது கிருஷ்ணா, பசுபதி மகன் ராகவ் உடன் நின்று பேசுவதை பார்த்து நிவின் ஷாக் ஆனார்.
https://www.youtube.com/watch?v=DgEDW4HkEH4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் கிருஷ்ணாவின் சுயரூபத்தை விஜய் கண்டுபிடித்து விடுகிறார். பின் கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி விஜய் வீட்டில் இருந்து தப்பிக்க சொல்கிறார். உடனே விஜய், முத்து மலரின் குடும்பத்தை மொத்தமாக கையும் களவுமாக பிடித்து விடுகிறார். அதற்குப்பின் முத்துமலர், நான் சந்தானத்தின் மனைவியே கிடையாது. பசுபதி சொல்லி தான் நான் இவ்வளவும் செய்தேன் என்று உண்மையை சொல்கிறார். இதை கேட்டு சாரதா ஷாக் ஆகிறார்.