கொடைக்கானல் வீட்டை வாங்க நினைக்கும் விஜய், கங்கா சொன்ன வார்த்தை - மகாநதி

By subhashini · 2/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வீட்டில் அலங்காரம் செய்திருப்பதை பார்த்து விஜய், காவிரிக்கு ஒண்ணுமே புரியவில்லை. அப்போது பாட்டி, உனக்கு ஐந்தாவது மாதம். பூச்சூடும் விழா நடத்துகிறோம். உங்கள் வீட்டில் இருந்தும் வந்தார்கள். எல்லா ஏற்பாடு செய்து விட்டோம் என்று சொன்னார்கள். பின் விஜய்- காவிரி இருவருமே தயாராக போனார்கள். இன்னொரு பக்கம் சாரதா, தன்னுடைய மகளுக்காக பார்த்து பார்த்து எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்.

இதை பார்த்து கோபப்பட்ட கங்கா, தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். பின் சாரதா வீட்டில் எல்லோருமே காவேரியின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். விஜய் அவர்களை கவனித்தார். அதை எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் தான் வந்தது. பின் காவேரி ரூமில் தயாராகிக் கொண்டிருந்தார். அதை பார்த்து யமுனா, கங்கா இருவரும் முறைத்துக் கொண்டிருந்தார்கள். பின் யமுனா, எனக்கும் மேக்கப் போடணும் என்று சொன்னவுடன் காவேரி போட சொன்னார்.

மகாநதி:

காவிரிக்கு பூச்சூடல் விழா நடைபெறுகிறது. விஜய், காவிரியின் காவிரியின் அழகில் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். காவிரி- விஜய் இருவருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து கங்கா, யமுனாவிற்கு கடுப்பானது. பின் நல்லபடியாக விழா முடிந்து விட்டது. அதற்குப்பின் கங்கா, யமுனா இருவருமே கொடைக்கானல் வீட்டை விற்பதை பற்றி பேசி இருந்தார்கள். காவிரி ஒத்துக் கொள்ளவே இல்லை. பின் கங்கா- யமுனா இருவருமே எங்களுக்கு பணம் தேவை.

சீரியல் ட்ராக்:

கண்டிப்பாக வீட்டை விற்க தான் போகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். அந்த சமயப் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் கூப்பிட்டதால் காவிரியால் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வந்து விட்டார். அதற்குப்பின் காவிரி, தாத்தா, விஜய் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டை விற்பதை பற்றி காவிரி சொன்னார். அதற்கு விஜய் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது தாத்தா, நீ அந்த வீட்டை வாங்கிக்கொள் என்று சொன்னார். விஜய் நல்ல ஐடியா என்று யோசித்தார்.

https://www.youtube.com/watch?v=zXYTvh5rZ60

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதற்குப்பின் விஜய், நீங்கள் உங்கள் கொடைக்கானல் வீட்டை விற்க நினைத்தால் நாங்களே காவிரி பெயரில் வாங்கிக் கொள்கிறோம். ஆனால், அந்த வீடு காவிரி பெயரில் இருந்தாலுமே எல்லோருக்குமே தான் சொந்தம் என்று சொல்கிறார். இதை கேட்டு கோபப்பட்ட கங்கா,
காவிரி பெயரில் வீட்டை எழுதி வைப்பதில் எனக்கு விருப்பமே இல்லை என்று சொல்கிறார். இதை கேட்டு விஜய் ஷாக் ஆகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full