விஜய்யிடம் கையும் களவுமாக சிக்கி கொண்ட ராகவ்-கிருஷ்ணா, வெளிவருமா உண்மை? மகாநதி

By subhashini · 20/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவினும் சரி என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். கங்கா தன்னுடைய கணவர் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். யமுனா, கங்காவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் கிருஷ்ணாவை பின் தொடர்ந்து நிவின் சென்றார். அப்போது கிருஷ்ணா, பசுபதி மகன் ராகவ் உடன் நின்று பேசுவதை பார்த்து நிவின் ஷாக் ஆனார்.

நிவின், நான் கிருஷ்ணாவை பாலோ பண்ணிப் போனேன். அவன் பசுபதியின் மகன் ராகவ் உடன் பேசிக் கொண்டிருக்கிறான். ஏதோ ரெண்டு பேரும் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள் என்றார். இதைக் கேட்ட விஜய்க்கு ஷாக் ஆனது. ஆனால், விஜய், காவிரியிடம் எதுவும் சொல்லவில்லை. அதற்கு பின் நிவின், கிருஷ்ணா, விஜய் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணாவை குடிக்க வைத்து வாயில் இருந்து உண்மையை வர வைக்க விஜய் முயற்சி செய்தார். ஆனால் கிருஷ்ணா தெளிவாக இருந்தார். உண்மையை சொல்லாமல் சமாளித்தார்.

மகாநதி:

விஜய்க்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. அதற்குப்பின் ஆபீஸில் விஜய், கிருஷ்ணாவுடைய சர்டிபிகேட்டை பற்றி எல்லாம் கேட்டார். கிருஷ்ணா, கத்தாரில் இருக்கிறது இங்கு இல்லை என்று சமாளித்தார். பின் விஜய், சாஃப்ட் காபி இருந்தாலும் போதும் அனுப்பிவிடு என்று சொன்னவுடன் கிருஷ்ணா சரி என்றார். பின் ராகவ்க்கு போன் செய்த கிருஷ்ணா, விஜய்க்கு என் மீது சந்தேகம் வந்து சர்டிபிகேட் கேட்டார் என்று நடந்ததை சொன்னார். ராகவ், எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். பயப்படாதே என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராகவ் - கிருஷ்ணா இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராகவ், நாங்கள் என்ன சொன்னோம், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய். சீக்கிரம் வேலையை முடிக்க முடியாதா? என்கிறார். கிருஷ்ணா, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. விஜய்க்கு என் மீது சந்தேகம் வந்துவிட்டது. துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்று சொல்கிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை விஜய் பார்த்து கூப்பிடுகிறார். பின் விஜய் பார்த்தவுடன் கிருஷ்ணா-ராகவ் இருவரும் சாக்காகிறார்கள். விஜய், இருவரையும் பிடித்து வெளுத்து வாங்குகிறார். இருந்தாலும் இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டிற்கு வந்த விஜய், எல்லோரும் பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி அடைகிறார். அதற்குப்பின் நிவினிடம் விஜய் நடந்தது எல்லாம் சொல்கிறார். நிவின், எப்படியாவது இந்த கும்பலை பிடிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். அப்போது வந்த காவிரி, கிருஷ்ணாவால் வேலை ஒழுங்காக நடக்கவில்லை. அதை கவனியுங்கள் என்று சொல்கிறார். விஜய், உண்மையை சொல்லாமல் சரி என்கிறார். அதற்குப்பின்
கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். முத்துமலர், சிந்து இருவரும் வீட்டை விட்டு கிளம்புவதை நிவின்- விஜய் இருவரும் ஒளிந்து கொண்டு பார்த்தார்கள்.

behindtalkies AMP · Quick view
View full