தாத்தா எடுத்த அதிரடி முடிவால் வேதனைப்படும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் பாட்டி, அவன் ஆபீசிலும் கவனம் வைக்க மாட்டான். நீங்கள் இங்கிருந்து கொண்டு ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் சாரதாவிற்கு ரொம்பவே கஷ்டமாகிறது.
இன்னொரு பக்கம் விஜய், காவிரி இருவரும் ஆபிஸ் பிரச்சனை எப்படி சரி செய்வது என்று தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் விஜய், கஸ்டமர்ஸ் எல்லாம் சந்தித்து பேச வந்தார். ஆனால், யாருமே விஜய் சொல்வதை கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் கோபப்பட்டு காவேரி, கத்துகிறார். உடனே அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. விஜய் பதறிப் போனார்
காவேரி, உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. தயவுசெய்து பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அவர்கள் எல்லோரையும் சமாதானம் செய்து உட்கார வைத்தார். பின் விஜய், தன்னுடைய தரப்பு நயத்தை எல்லாம் எடுத்து சொல்லி வீட்டு வேலையை முடித்து தருவதற்கு சில மாதங்கள் நேரம் கேட்டார். ஆனால், கஸ்டமர் எல்லோருமே முடியாது என்று மறுத்தார்கள். பின் விஜய், எப்படியோ பேசி நேரம் வாங்கிக் கொண்டார். அப்போது கஸ்டமர் ஒருவர், நீங்கள் சரியான நேரத்தில் முடித்து தரவில்லை என்றால் நாங்கள் போலீஸில் புகார் கொடுப்போம் என்றெல்லாம் செல்வதால் விஜயும் ஒத்துக் கொண்டார்.
மகாநதி:
இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி பேசியது நினைத்து சாரதா, கங்கா இருவருமே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது முத்து மலர் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். இருந்தாலுமே சாரதா கேட்கவில்லை. இன்னொரு பக்கம் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று விஜய்- காவிரி இருவருமே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது விஜய்க்கு போன் செய்த நிவின், குமரன் இருக்கும் இடம் தெரியவில்லை. சீக்கிரமாகவே கண்டுபிடிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கங்கா, சாரதா இருவரும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருப்பதை கவனித்த விஜயன் தாத்தா, அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலையெல்லாம் முடித்துவிட்டு விஜய்-காவிரி இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சோர்வாக இருப்பதால் காவிரி, டீ கேட்கிறார். பின் விஜய்யும் காவிரி சாப்பிடுவதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்து ஆபீஸில் நடந்ததை பற்றி எல்லாம் பேசிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அடுத்த நாள் காலையில் தாத்தா, பாட்டி இருவரும் விஜய்யை பேசுவதற்கு கூப்பிடுகிறார்.
சீரியல் ட்ராக்:
விஜய், என்னவோ நடக்கப்போகிறது என்று பயந்து கொண்டிருக்கிறார். உடனே பாட்டி, காவிரியின் வளைகாப்பு பற்றி பேசணும். வீட்டில் உள்ள எல்லோருமே வரட்டும் என்று சொல்கிறார். பின் காவிரி, சாரதா, கங்கா எல்லோருமே வந்துவிடுகிறார்கள். அப்போது தாத்தா, காவேரிக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு நடத்த இருக்கிறோம். வளைகாப்பு முடிந்தும் காவிரி இங்கே இருக்கட்டும் என்று சொல்கிறார். சாரதா, வளைகாப்பு முடிந்து என்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்கிறார். அதற்கு பாட்டி ஒத்துக் கொள்ளவே இல்லை.
தாத்தா, உங்கள் பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு காவிரி உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்கிறார். இதனால் சாரதாவால் எதுவும் பேச முடியவில்லை. இதை எல்லாம் கேட்டு காவேரி ரொம்பவே வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது