வார்த்தையால் காவிரியை புண்படுத்திய விஜய், விவாகரத்து கேட்கும் விஜய்யின் பாட்டி - மகாநதி

By subhashini · 20/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் போலீஸ்மே விஜய், நான் கிளம்பி கொடைக்கானலுக்கு வருகிறேன் என்றார். அதற்கு காவிரி, நீங்கள் இங்கு வர தேவை இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். பசுபதியால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் வேண்டாம். நான் உங்களை விட்டு விலகுகிறேன் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டு விஜய் ரொம்பவே கஷ்டப்பட்டார். அதற்குப்பின் விஜய், தன்னுடைய தாத்தாவிடம் காவிரி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்ட விஜய் பாட்டி, அவள் ரொம்ப திமிர் பிடித்தவள். உனக்கு மரியாதை கொடுக்க மாட்டுகிறாள். உன்னுடைய வாழ்க்கையை பார் என்றார்.

அதற்குப்பின் காவிரி குடும்பத்தினர் எல்லோருமே சென்னைக்கு வந்து விட்டார்கள். அப்போது வந்த நிவின், பசுபதிக்கு உங்கள் வீட்டை வாங்குவது நோக்கம் கிடையாது. காவிரியையும் உங்களையும் நிம்மதி இல்லாமல் அலைய வைப்பது தான் அவருடைய ஒரே லட்சியம் என்று சொன்னார். உடனே காவிரி, எப்படி வீட்டை வாங்கணும் என்று எனக்கு தெரியும். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று தன்னுடைய அம்மாவுக்கு ஆறுதல் சொன்னார். உடனே காவிரி அம்மா, உங்கள் அப்பா ஒவ்வொருவரின் மீதும் கனவு வைத்து இருந்தார். உங்கள் அப்பாவின் கனவை நோக்கி போராடுங்கள் என்று சத்தியம் கேட்டார். பின் தன் அம்மா சொன்ன வார்த்தைக்காக நான்கு சகோதரிகளும் சத்தியம் செய்து கொடுத்தார்கள்.

மகாநதி:

நேற்று எபிசோட்டில் காவிரி, கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு எடுத்தார். ஒரு அதை பார்த்த காவிரியின் அம்மா, கங்கா இருவருமே என்ன பிரச்சனை? என்று கேட்டார்கள். கங்கா அந்த மாத்திரை பார்த்துவிட்டு இது கர்ப்பமாக இருப்பவர்கள் சாப்பிடுவது என்றார். இதை கேட்டு காவிரி அம்மா ஷாக் ஆனார். ஒரு வழியாக காவிரி, அந்த மாத்திரை எனது இல்லை என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் கோயிலுக்கு போன காவேரி, விஜயை நினைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது விஜயுமே கோயிலுக்கு வந்து விட்டார்.

நேற்று எபிசோட்:

விஜய், எதற்காக இப்படி செய்கிறாய்? நீ குழந்தைக்காகவும் நம்முடைய வாழ்க்கைக்காகவும் ஏதாவது முடிவெடுத்து இருக்கியா? உன்னுடைய அம்மா வீட்டு பிரச்சனையை மட்டும் பார்க்கிறாய். என்னையும் நினைத்து பாரு என்று எல்லாம் பேசி இருந்தார். அந்த சமயம் கோவிலுக்கு வந்த காவிரியின் அம்மா, விஜய்- காவேரி பேசுவதை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். கடைசியில் விஜய், என் பாட்டி சொன்னது உண்மைதான். நீ ரொம்ப திமிர் பிடித்தவள். நான் உன்னை தேடி வந்து பேசுவதால்தான் என்னை மரியாதை தர மாட்டிக்கிறாய். என் குழந்தைக்கு என்ன ஆனது என்ற பயத்தில் தான் இங்கு வந்தேன் என்று கோபமாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், என்னுடைய குழந்தைக்காக மட்டும் தான் நான் உன்னை பார்க்க வருகிறேன். குழந்தையை என்னிடம் பெற்றுக் கொடுத்துவிட்டு நீ உன்னுடைய அம்மாவிற்கு சர்வீஸ் பண்ணு. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. இனிமேல் நான் உன்னை பார்க்க வரமாட்டேன். நீ பேசும் பேச்சுக்கெல்லாம் யாரும் உன்னை பார்க்க வர மாட்டார்கள் என்று ரொம்ப மோசமாக திட்டி விட்டு செல்கிறார். காவிரி எதுவுமே பேசாமல் மனம் உடைந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் காவிரி அம்மா, நீ இன்னும் விஜயுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறாயா? உனக்கு வேணுமென்றால் அவனுடன் சேர்ந்து வாழு என்றெல்லாம் இவருடைய பங்கிற்கு திட்டி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

காவிரி மனமடைந்து இன்னும் அழுகிறார். இன்னொரு பக்கம் விஜய், நான் கொஞ்சம் நாட்கள் வெளியே இருக்கிறேன். மன அழுத்தமாக இருக்கிறது. நான் தனியாக இருந்து விட்டு வருகிறேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு அவருடைய பாட்டி ரொம்பவே கஷ்டப்படுகிறார். அதற்குப்பின் விஜய்யின் பாட்டி வக்கீலை வரவைத்து விவாகரத்து நோட்டீசை ஏற்பாடு செய்கிறார். தாத்தா வேணாம் என்று தடுத்துமே பாட்டி கேட்கவில்லை. பின் விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக்கொண்டு காவிரியின் வீட்டிற்கு போன பாட்டி, விஜய்யும் நீயும் தனியாகத்தான் இருக்கிறீர்கள். சட்டப்படி நீங்கள் இருவருமே பிரிந்து விடுங்கள். அவரவர் வாழ்க்கையை பாருங்கள் என்கிறார். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியில் காவிரி உறைந்து இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full