சொத்தை அபகரிக்க நினைக்கும் சித்தப்பா, விஜய் எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, காவிரிக்கு பணக்கார வாழ்க்கை கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் தான் கஷ்டப்படுகிறோம். வீட்டை விற்று எங்களுக்கான செட்டில்மெண்ட் கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் சொல்வதால் சாரதாவுமே மனம் மாறினார். இருந்தாலும் காவிரியிடம் கேட்கணும் என்கிறார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவிரி, நான் விஜயுடன் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு போகலாம் இருக்கிறேன் என்றார். இதை கேட்டு சாரதாவும் சம்மதம் சொன்னார். தயவு செய்து வெளியே போ என்று சொல்லாமல் கங்கா சொன்னார்.
காவிரி, பாட்டியின் உடல்நிலையும் நினைத்து பாருங்கள். தயவு செய்து வீட்டிற்கே போகலாம் என்று எவ்வளவோ பேசி இருந்தார். விஜய் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் யமுனா, எனக்காக நீங்கள் உங்க அம்மாவிடம் சப்போர்ட் செய்து பேசியதற்கு நன்றி. நான் என்னுடைய வீட்டை விற்று வரும் பங்கில் உங்களுக்கு தருகிறேன். அதை வைத்து உங்கள் தொழிலை தொடங்குங்கள் என்றார். நிவின், நீ எல்லாரை பற்றியும் யோசிப்பதை நிறுத்திவிட்டு. உன்னுடைய கேரியரில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.
மகாநதி:
அதற்குப்பின் துணிகளை எல்லாம் பேக் செய்துவிட்டு விஜய்- காவிரி இருவருமே வீட்டை விட்டு கிளம்ப தயாராக இருந்தார்கள். சாரதா, பாட்டி எல்லோருமே எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். மனம் இல்லாமல் அங்கிருந்து விஜய்-காவேரி கிளம்பினார்கள். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு பயங்கர கடுப்பானது. ஒரு வழியாக காவிரி- விஜய் இருவருமே தங்களுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள். தாத்தா- பாட்டி இருவருமே காவிரி, விஜயை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவேரி வீட்டிற்கு வந்தவுடன் பாட்டி ரொம்ப சந்தோசமாக இருக்கிறார். பாட்டி, இங்கும் அங்கமாக சின்ன பிள்ளை போலவே ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறார். வீடே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், சித்தப்பா மட்டும் விஜய் வந்ததை நினைத்து கோபப்படுகிறார். பின் பாட்டி, நீ எங்கும் செல்லக்கூடாது. எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் காவிரி- விஜய் இருவரும் பாட்டியுடன் சந்தோஷமாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் சித்தப்பா, கம்பெனியை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் தாத்தா வேண்டாம் என்கிறார். அதற்குப்பின் சித்தப்பா சொன்னதை தாத்தா விஜய்யிடம் சொல்கிறார். அதனால் விஜய்-காவிரி இருவருமே கம்பெனி பொறுப்பை எடுப்பதை பற்றி யோசிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.