கல்யாணியின் சூனியத்தால் காவிரியின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் விஜய் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, அது எல்லாம் வேண்டாம். குழந்தையை நம்முடன் வைத்துக்கொள்ளலாம் என்றார். பின் கல்யாணியிடம் சாரதா, குழந்தையை மட்டும் நாங்கள் அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார். ஆனால், கல்யாணி ஒத்துக் கொள்ளவில்லை. கல்யாணி ஏதேதோ டிராமாவை செய்து குழந்தையை தன்னிடம் வைத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். சாரதா வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். பின் வீட்டிற்கு காவிரி வந்தார்.
காவேரி, விஜயின் வீட்டிற்கு வந்து இருந்தார். விஜய்யின் தாத்தா, பாட்டியை காவிரிக்கு யார் என்று தெரியவில்லை. பின் சாரதா, விஜயின் தாத்தா- பாட்டி தூரத்து உறவினர்கள் என்று சொல்லிவிட்டார். பின் கங்காவிற்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த விஷயத்தைப் பற்றி எல்லாம் சொன்னார்கள். காவிரிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சாரதாவின் குடும்பம் விஜயின் வீட்டை விட்டு கிளம்பினார்கள். தாத்தா, காவிரி கிளம்புவதை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டார். அதற்குப்பின் விஜய் பார்ப்பதற்கு தாத்தா, பாட்டி எல்லோரும் ஹாஸ்பிடல் போனார்கள்.
மகாநதி:
விஜய் கண் விழித்தவுடன் காவிரியும் குழந்தையும் பற்றி தான் விசாரித்தார்கள். பாட்டி கல்யாணி உண்மையை சொல்லாமல் காவிரி நன்றாக இருந்தார். அப்புறமாக பார்க்கலாம் என்று சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் காவேரி சென்று கொண்டிருக்கும் போது தன்னுடைய அப்பாவை பற்றியும் சென்னைக்கு வந்ததைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, காவிரியிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம் என்கிறார். காங்கா, அதெல்லாம் வேண்டாம். உண்மை தெரிந்தால் காவிரியால் சந்தோஷமாக இருக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். இன்னொரு பக்கம் விஜய், ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்த விஜய், காவிரியை பற்றி கேட்கிறார். இருந்தாலும் பாட்டி எதுவும் சொல்லாமல் விஜயை கோயிலுக்கு அழைத்து சென்று பூஜை எல்லாம் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
மீண்டும் விஜய், காவிரி பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறார். உடனே கல்யாணி அழுது டிராமா செய்கிறார். சித்தப்பா, காவிரி இறந்து விட்டாள் என்று சொல்கிறார். இதைக் கேட்ட விஜய் உடைந்து போய் கதறி அழுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்க்கு ஆறுதல் சொல்கிறார்கள். பின் சித்தி, குழந்தையை கொண்டு வந்து விஜய் இடம் கொடுக்கிறார். குழந்தையை பார்த்து விஜய் எமோஷனலாக அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.