விஜய் சொன்ன வார்த்தையால் மனம் மாறிய மாமி, காவிரி அம்மா முடிவு என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வெண்ணிலாவை பற்றி விஜய், தாத்தா, பாட்டி எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜய்க்கு போன் செய்த அவருடைய PA, வெண்ணிலா மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை சொன்னார். இதை கேட்டவுடன் விஜய் ஷாக் ஆனார். காதல் தோல்வியால் வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக நியூஸ் சேனல்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இதை பார்த்தவுடன் விஜய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் காவிரியிடம் இந்த தகவலை குமரன் சொன்னார். இதனால் காவிரி, விஜய்யை சந்திக்கப் போனார்.
அப்போது விஜய், என்னை லாயர் தலைமறைவாக இருக்க சொன்னார். நான் என் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். இது இன்னொரு சிம். இதில் என்னிடம் பேசு. எதை பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். அதனால் காவிரியும் தைரியமாக விஜய்யை அனுப்பி விட்டார். அதற்குப்பின் வி காவிரி வெண்ணிலாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு போனார். அங்கு வெண்ணிலா மாமாவிடம் விசாரித்தார். ஆனால், அவர் உண்மையை சொன்னால் பசுபதி தன்னுடைய குடும்பத்தை ஏதாவது செய்து விடுவான் என்று பொய் சொன்னார். அந்த சமயம் பார்த்து போலீஸ் வந்தார்கள். பின் காவிரியிடம் விஜய் எங்கே என்று விசாரித்தார்கள்.
மகாநதி சீரியல்:
காவிரியிடம் போலீஸ் துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவிரி, எனக்கு விஜய் எங்கிருக்கிறார்? என்று தெரியாது என்றார். இருந்தும் விடாமல் போலீஸ் காவிரியின் வீட்டிற்க்கே சென்று சோதனை செய்தார்கள். அங்கு விஜய் இல்லை என்பதை தெரிந்தவுடன் போலீசார் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி வீட்டில் உள்ள எல்லோருமே போலீசிடம் வாக்குவாதம் செய்தார்கள். உடனே காவிரி, எதுவாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பேசுகிறேன். தயவுசெய்து நீங்கள் கிளம்புங்கள் என்று அனுப்பி விட்டார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்குப்பின் காவிரிக்கு போன் செய்த விஜய், கம்பெனியில் கொஞ்சம் பிரச்சனை. நீ நேரில் சென்று பார்க்கிறாயா? என்று சொன்னார். காவிரியுமே கம்பெனிக்கு சென்று விஜய் சொன்னது போல் எல்லா பிரச்சனையும் சரி செய்தார். அது மட்டும் இல்லாமல் கம்பெனியின் எல்லா முடிவிலும் பேங்க் அக்கவுண்டிலும் காவிரியின் பெயர் ஜாயின்ட் செய்திருப்பதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் கம்பெனியில் எல்லா வேலையும் முடித்துவிட்டு காவிரி வீட்டிற்கு வந்தார். அப்போது காவிரியின் அம்மா, இவ்வளவு பெரிய ஆர்டரை எப்படி முடிப்பது? தயார் செய்ய இடமும் இல்லை என்று புலம்பி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையின் இன்றைய எபிசோட்டில் விஜய்க்கு போன் செய்த காவிரி, ஆபீஸில் தனது எல்லா உரிமை இருக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார். விஜய், இதை சொல்லதான் இருந்தேன். ஆனால், அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது என்று ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவிரி, அப்பளம் பிசினஸ் நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. நான் உடனே உங்களிடம் வந்து விடுவேன். பிசினஸ் செய்ய இடம் இல்லாததை பற்றி விஜயிடம் காவிரி சொல்கிறார். உடனே விஜய், அந்த ஹவுஸ் ஓனரிடம் ஏற்பாடு செய்து தர சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அடுத்த நாள் காலையிலேயே ஹவுஸ் ஓனர் மாமி, அப்பளம் போடுவதற்கு எல்லாம் ஏற்பாடும் நான் செய்து தருகிறேன். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று காவேரி அம்மாவிடம் சொல்கிறார். இதைக் கேட்டு காவிரி குடும்பமே ஷாக் ஆகிறது. இதெல்லாம் விஜய் தான் செய்தார் என்று காவிரி தெரிந்து கொண்டு சந்தோஷப்டுகிறார். அதற்குப்பின் கங்கா, தன்னுடைய செக்கப்புக்கு ஹாஸ்பிடலுக்கு போகிறார். உடனே காவிரி, தானும் செக்கப் போவதை நினைத்து பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது