முத்துமலர் குடும்பத்தால் வீட்டில் வெடிக்கும் பூகம்பம், விஜய் சொன்ன வார்த்தை - மகாநதி

By subhashini · 18/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, உன் மகன் யோகியமானவனா? இங்கு ஒரு குடும்பம், அங்கு ஒரு குடும்பம் வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறான். இவ்வளவு கேடுகெட்டவனா? என்றெல்லாம் சந்தானத்தை திட்டிக் கொண்டிருந்தார். பின் தன்னுடைய கணவர் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து சாரதா உடைந்து போயிருந்தார். அவருடைய மகள்கள் எல்லோருமே ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலுமே சாரதாவால் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப்பின் காவிரி, தன்னுடைய அப்பா தனக்காக செய்ததெல்லாம் நினைத்துப்பட்டு ரொம்ப எமோஷனலாக அழுது விஜய்யிடம் பேசிக் கொண்டிருந்தார்.

குமரன், கங்காவிற்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில், மாமாவிற்கு இன்னொரு குடும்பம் இருக்கும் விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும். மாமா என்னிடம் சத்தியம் வாங்கியதால் தான் சொல்ல முடியவில்லை. என்னை மன்னித்துவிடு கங்கா. கோபப்படாதே, நிவின் போட்டோ அனுப்பினார். அவர்கள் தான் மாமாவுடைய இன்னொரு குடும்பம் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு கங்கா ரொம்பவே உடைந்து போய் அழுதார். இன்னொரு பக்கம் நிவின், விஜய் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிவின், குமரனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கும் விஷயம் தெரியும் என்று சொன்னதை கேட்டு விஜய் ஷாக் ஆகினார்.

மகாநதி:

அப்போது முத்து மலர் குடும்பம் அங்கேயே தங்குவதற்கு வந்தது. விஜய், வேண்டாம் என்றார். ஆனால், முத்துமலர் குடும்பம் கேட்கவில்லை. எங்கள் உரிமையை விட்டு தர முடியாது என்று சொன்னார்கள். இதை கேட்ட சாரதா, கோபப்பட்டு முத்து மலரிடம் சண்டை போட்டார். பின் எல்லோரையும் வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டார். முத்து மலர், நம்ம பிரச்சனை செய்ய வேண்டாம். ஆனால், நம்முடைய உரிமையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார். விஜய், அவர்கள் குளிரில் வெளியே கஷ்டப்பட்டார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்கிறார். சாரதா கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், சாரதாவிடம் பேசி முத்து மலர் குடும்பத்தை உள்ளே தங்க வைக்க சம்மதம் வாங்கி கொள்கிறார். அதற்குப்பின் முத்துமலர் குடும்பமும் உள்ளே வந்து தங்கிக் கொள்கிறது. விஜய் அவர்களுக்கு போர்வை எல்லாம் கொடுத்தார். இது எல்லாம் பார்த்து சாரதாவிற்கு கோபம் அதிகமாகிறது. அதற்குப்பின் முத்து மலரின் மகளால் பாத்ரூம் கூட போக முடியாமல் கஷ்டப்படுகிறார். அந்த சமயம் பார்த்து சந்தானத்தின் அம்மா வருகிறார். அப்போது முத்துமலர், நானும் தான் உங்கள் மருமகள்.

சீரியல் ட்ராக்:

இவர்கள் உங்கள் பேரப்பிள்ளை இல்லையா? என்று எமோஷனலாக பேச, சந்தானத்தின் அம்மாவும் மனம் இறங்குகிறார். இதையெல்லாம் பார்த்து சாரதாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சாரதா, நீங்களும் ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் மகனும் ஏமாந்து விட்டார்கள். சிந்து- கிருஷ்ணா என்று நதிகள் பெயரையே வைத்திருக்கிறார் என்றெல்லாம் பயங்கரமாக கோபப்படுகிறார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருக்குமே கோபம் அதிகமாகின்றது. பின் காவிரி, தன்னுடைய தந்தை செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது விஜய், இந்த நேரத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணலாமா? இவர்கள் செய்ய விடுவார்களா? என்று கேட்கிறார். அதற்கு காவிரி, என்ன ஆனாலும் பண்ணி தான் ஆகணும் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full