விஜய் - காவிரி கார் மீது மோதிய லாரி, சந்தோஷத்தில் ராகவ், அடுத்து என்ன? பரபரப்பில் மகாநதி

By subhashini · 1/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ராகவை தேடி விஜய்-நிவின் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது போலீஸ், ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பத்திரமாக இருக்கிறார்களா? என்று விஜய்- நிவின் இருவரும் போன் செய்து விசாரித்தார்கள். அப்போது விஜய் நடந்ததை எல்லாம் காவேரியிடம் சொன்னார். அதற்கு பின் ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை அறிந்து கொண்டார்கள் விஜய்-நிவின்.

விஜய்- நிவின் இருவரும் ராகவின் காரை பின்தொடர்ந்து செல்கிறார்கள். ஒரு வழியாக ராகவை பிடித்து நடு ரோட்டிலேயே விஜய்-நிவின் இருவரும் அடிவெழுத்து வாங்குகிறார்கள். அதற்குப்பின் போலீஸிடம் ராகவை ஒப்படைத்து விட்டார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் கங்கா கொஞ்சம் கொஞ்சமாக ரெக்கவர் ஆகி வந்தார். சில மாதங்களுக்கு பிறகு விஜய்- நிவின் இருவரும் சந்தித்து பேசி கொண்டார்கள். அப்போது நிவின், ராகவ் பெயிலில் வெளியே வந்து விட்டான் என்றார். இதை கேட்டவுடன் விஜய் பதறிப் போனார்.

மகாநதி:

பின் விஜய், காவிரியுடன் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும். நீங்கள் வீட்டில் எல்லோரையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். நிவின், விஜயின் வீட்டில் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருந்தார். இன்னொரு பக்கம் காவிரி, விஜய் இருவரும் ஹாஸ்பிடல் சென்று வந்த பிறகு ஓட்டலில் சாப்பிட்டார்கள். காவிரி சந்தோசமாக இருந்தார். ஆனால், விஜய் மட்டும் பிரச்சனை ஏதாவது வருமா? என்று பயந்து கொண்டு சுத்தி எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

சீரியல் ட்ராக்:

விஜய், காவிரியை பீச்சுக்கு அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார். பின் விஜய், இரண்டு நாள் இங்கேயே தங்கலாம் என்றெல்லாம் சொன்னார். காவிரியும் ரொம்ப சந்தோஷமாக என்ஜாய் பண்ணுகிறார். அதற்குப்பின் புக் செய்த ரெசார்ட்டுக்கு இருவரும் போனார்கள். அங்கு விஜய், காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்தார். இன்னொரு பக்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ராகவ், விஜய்- காவிரியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.

https://www.youtube.com/watch?v=AZx1QvgPyXA

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் விஜய், காவேரி இருவரும் சந்தோஷமாக காரில் பேசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது ராகவ் வைத்த நபர் விஜயின் காரின் மீது லாரியை விட்டு மோதுகிறார். விஜய், காவேரி இருவருமே சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடக்கிறார்கள். இருவருக்கும் நிறைய ரத்தம் போகிறிருப்பதால் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து செல்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full