மீண்டும் விஜய் வீட்டிற்கே சென்ற காவிரி, தாத்தா சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, இங்கே இருந்து கொண்டு அந்த வீட்டையெல்லாம் பார்த்துக் கொள்ள முடியாது. வீட்டை விற்பது தான் சரி. உனக்கு ஊருக்கு போகணும் என்றால் ரூம் போட்டு கொடைக்கானலில் தங்கி விட்டு வா என்றெல்லாம் சொன்னார். இருந்தாலுமே கேட்காமல் காவிரி ரொம்ப எமோஷனலாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். சாரதாவுமே என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தார். பின் விஜய்-காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, பாட்டியின் உடம்பு சரியில்லாமல் இருப்பதால் வீட்டிற்கு சென்று விடலாம் என்றெல்லாம் நாசுக்காக சொல்லி பார்த்தார்.
விஜய் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிவின் அம்மா, எதற்காக இப்படி கஷ்டப்படுகிறாய். உனக்கு பணத்தை நான் தருகிறேன். நீ யமுனாவிற்கு விவாகரத்து கொடுத்துவிடு. இந்த சொத்து முழுவதும் நீதான் அனுபவிக்கணும். உனக்கு பிடித்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என்றெல்லாம் சொன்னார். இதைக்கேட்டு யமுனாவிற்கு பயங்கர கோபம் தான் வந்தார்.
மகாநதி:
நிவின், யமுனா நான் அவளுக்கு கிடைப்பேனா? இல்லையா? என்ற பதட்டத்தில் தான் இருக்கிறார். யமுனாவிற்கு என்னை ஏதோ ஒரு விதத்தில் பிடித்திருக்கிறது. ஆனால், என்னால் தான் அவளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவளை விவாகரத்து செய்யணும் என்று எனக்கு எண்ணம் வந்ததில்லை. தேவையில்லாமல் இதைப் பற்றி பேசாதீர்கள் என்றார். இதையெல்லாம் கேட்ட யமுனா ரொம்பவே எமோஷனலாக அழுதார். அதற்குப்பின் யமுனா, கொடைக்கானல் வீட்டை விற்கும் விஷயமாக பேசுவதற்கு தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தார். அப்போது கங்கா- யமுனா இருவருமே சேர்ந்து தன்னுடைய அம்மாவிடம் வீட்டை விற்பதை பற்றி பேசினார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது கங்கா, காவிரிக்கு பணக்கார வாழ்க்கை கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் தான் கஷ்டப்படுகிறோம். வீட்டை விற்று எங்களுக்கான செட்டில்மெண்ட் கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் சொல்வதால் சாரதாவுமே மனம் மாறினார். இருந்தாலும் காவிரியிடம் கேட்கணும் என்கிறார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவிரி, நான் விஜயுடன் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு போகலாம் இருக்கிறேன் என்றார். இதை கேட்டு சாரதாவும் சம்மதம் சொன்னார். தயவு செய்து வெளியே போ என்று சொல்லாமல் கங்கா சொன்னார்.
https://www.youtube.com/watch?v=DX2hb9c2U3I
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் விஜய், தன்னுடைய வீட்டிற்க்கே செல்வதற்கு ஒத்துக்கொள்கிறார். பின் காவிரி- விஜய் இருவருமே சாரதா, பாட்டி இடம் சொல்லிவிட்டு கிளம்பி தங்களுடைய வீட்டிற்கு வருகிறார்கள். வீட்டில் தாத்தா, பாட்டி எல்லோருமே சந்தோசமாக விஜய்யை வரவேற்கிறார்கள். இதை பார்த்த சித்தப்பா கோபப்படுகிறார். பின் தாத்தா, நீங்கள் சீக்கிரமாகவே
கம்பெனியின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் சித்தப்பா, அவர் பொறுப்பேற்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்.