விஜய் சொன்ன வார்த்தையால் உடைந்து போன காவிரி, உன்மையை அறிந்தாரா காவிரி அம்மா? மகாநதி

By subhashini · 19/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் போலீஸ்மே பசுபதிக்கு சாதகமாக தான் பேசி இருந்தார். காவிரியிடம் பணத்தை கொடுப்பதற்காக அவகாசம் கேட்டார்கள். காவிரி, நாங்கள் கடன் வாங்கவில்லை. பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். பின் பசுபதி- காவிரிக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகவதால் காவிரியின் பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுதார். பின் உடனடியாக அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்கள். அப்போது டாக்டர், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் தான் மயக்கம் வந்தது. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

இதனால் கோபப்பட்ட காவிரி, பசுபதியை கொன்று விடலாம் என்று ஹாஸ்பிடலில் இருந்து வேக வேகமாக கிளம்பி வந்தார். உடனே காவிரி அம்மா, தடுத்து நிறுத்தி அவரை சமாதானம் செய்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அங்கு பசுபதி, வீட்டில் இருந்து எல்லா பொருள்களையும் எடுத்து வெளியே போட்டு வைத்திருந்தார். அதோடு . வீட்டு பாத்திரத்த்தையும் பசுபதி திருடி விட்டார்.
இதனால் காவிரி அம்மா ரொம்பவே மனமுடைந்து விட்டார். பின் பசுபதி, டாக்குமெண்ட் தான் இல்லாமல் இருந்தது. இந்த வீடு எனக்கு தான் ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து கிளம்புங்கள் என்று மிரட்டி இருந்தார். என்ன செய்வதென்று புரியாமல் காவிரி தவித்து நின்றார்.

மகாநதி:

நேற்று எபிசோட்டில் விஜய், நான் கிளம்பி கொடைக்கானலுக்கு வருகிறேன் என்றார். அதற்கு காவிரி, நீங்கள் இங்கு வர தேவை இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். பசுபதியால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் வேண்டாம். நான் உங்களை விட்டு விலகுகிறேன் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டு விஜய் ரொம்பவே கஷ்டப்பட்டார். அதற்குப்பின் விஜய், தன்னுடைய தாத்தாவிடம் காவிரி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்ட விஜய் பாட்டி, அவள் ரொம்ப திமிர் பிடித்தவள். உனக்கு மரியாதை கொடுக்க மாட்டுகிறாள். உன்னுடைய வாழ்க்கையை பார் என்றார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் காவிரி குடும்பத்தினர் எல்லோருமே சென்னைக்கு வந்து விட்டார்கள். அப்போது வந்த நிவின், பசுபதிக்கு உங்கள் வீட்டை வாங்குவது நோக்கம் கிடையாது. காவிரியையும் உங்களையும் நிம்மதி இல்லாமல் அலைய வைப்பது தான் அவருடைய ஒரே லட்சியம் என்று சொன்னார். உடனே காவிரி, எப்படி வீட்டை வாங்கணும் என்று எனக்கு தெரியும். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று தன்னுடைய அம்மாவுக்கு ஆறுதல் சொன்னார். உடனே காவிரி அம்மா, உங்கள் அப்பா ஒவ்வொருவரின் மீதும் கனவு வைத்து இருந்தார். உங்கள் அப்பாவின் கனவை நோக்கி போராடுங்கள் என்று சத்தியம் கேட்டார். பின் தன் அம்மா சொன்ன வார்த்தைக்காக நான்கு சகோதரிகளும் சத்தியம் செய்து கொடுத்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரி, கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு எடுக்கிறார். ஒரு அதை பார்த்த காவிரியின் அம்மா, கங்கா இருவருமே என்ன பிரச்சனை? என்று கேட்கிறார்கள். கங்கா அந்த மாத்திரை பார்த்துவிட்டு இது கர்ப்பமாக இருப்பவர்கள் சாப்பிடுவது என்கிறார். இதை கேட்டு காவிரி அம்மா ஷாக் ஆகிறார். ஒரு வழியாக காவிரி, அந்த மாத்திரை எனது இல்லை என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் மன உளைச்சலில் இருப்பதால் காவேரி கோயிலுக்கு போகிறார். அங்கு விஜயை நினைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது சரியாக விஜயுமே கோயிலுக்கு வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

விஜய், எதற்காக இப்படி செய்கிறாய்? நீ குழந்தைக்காகவும் நம்முடைய வாழ்க்கைக்காகவும் ஏதாவது முடிவெடுத்து இருக்கியா? உன்னுடைய அம்மா வீட்டு பிரச்சனையை மட்டும் பார்க்கிறாய். என்னையும் நினைத்து பாரு என்று எல்லாம் பேசுகிறார். காவேரி எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
அந்த சமயம் பார்த்து கோவிலுக்கு வந்த காவிரியின் அம்மா, விஜய்- காவேரி பேசுவதை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். கடைசியில் விஜய், என் பாட்டி சொன்னது உண்மைதான். நீ ரொம்ப திமிர் பிடித்தவள். நான் உன்னை தேடி வந்து பேசுவதால்தான் என்னை மரியாதை தர மாட்டிக்கிறாய். என் குழந்தைக்கு என்ன ஆனது என்ற பயத்தில் தான் இங்கு வந்தேன். இனிமேல் நான் உன்னை தேடி வரமாட்டேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு காவிரி ரொம்பவே உடைந்து போய் விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full