விஜய்யிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் காவிரி, கொடைக்கானல் கிளம்பும் குமரன் - மகாநதி

By subhashini · 8/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கோபத்தில் காவிரி, பசுபதியை தீட்டு விட்டு உன்னை முடித்துவிட்டு நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று ஆவேசப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே காவிரியை தடுத்து விட்டார்கள். பசுபதியும், காவிரியிடம் சவால் விட்டு கிளம்பி விட்டார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷன் என்ற காவிரி, பசுபதியை எப்படி வெளியில் விட்டீர்கள். அவன் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறான் என்றெல்லாம் கோபப்பட்டார். உடனே போலீஸ், நீங்கள் புகார் கொடுத்து விட்டு போங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு சென்ற பசுபதி, காவேரிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்னால் நான் எதற்காக விஜய்க்கு தொல்லை தருவேன் என்றார். உடனே பாட்டி, இனி காவிரிக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து என் பேரனை தொந்தரவு செய்யாதே என்று சொன்னார். பசுபதி, இந்த வார்த்தையை உங்கள் பேரன் சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். நான் கிளம்பி விடுவேன் என்றார். இதையெல்லாம் கேட்ட விஜய் கோபத்தில் பசுபதியை எட்டி உதைத்து வெளுத்து வாங்கி இருந்தார். தடுக்க வந்த ராகினியை தள்ளி விட்டார். பின் விஜய், நான் ஏன் காவிரியை மறக்கனும் என்று மிரட்டி வெளியே அனுப்பி விட்டார்.

மகாநதி:

நேற்று எபிசோட்டில் விஜய், நீங்கள் எதற்காக பசுபதி இடம் காவிரி இங்கு வரமாட்டாள் என்று சொன்னீர்கள். நான் காவிரி உடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்றார். அதற்கு பாட்டி உண்மையை சொல்ல வர உடனே சித்தி தடுத்து நிறுத்தி, பசுபதியை இங்கிருந்து அனுப்பத்தான் அப்படி சொன்னோம் என்று சமாளித்து விட்டார். அதற்குப்பின் விஜய் சென்ற பிறகு பாட்டி, காவிரி இந்த வீட்டிற்கு தேவை இல்லை. விஜய்யின் வாழ்க்கையை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று பேச, தாத்தாவிற்கு கோபம் வருகிறது. அதற்குப்பின் குமரனை சந்தித்து விஜய் பேசி இருந்தார். அப்போது பசுபதி வந்த விஷயத்தை எல்லாம் விஜய் சொன்னார்.

நேற்று எபிசோட்:

உடனே குமரன், இங்கேயும் பசுபதி வந்தான். பெரிய பிரச்சினையாகிவிட்டது என்று சொன்னார். பின் விஜய், காவிரி எதற்காக இப்படி செய்தார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டார். குமரன், உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு சென்ற விஜய், காவிரியை மிரட்டியதற்காக சண்டை போட்டார். பசுபதியுமே பதிலுக்கு பதில் கொடுத்தார். கடைசியில் கோவப்பட்ட விஜய், பசுபதியின் கையை முறுக்கி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பசுபதியால் காவேரி குடும்பத்திற்கு பிரச்சினை வரும் என்று அவர்கள் வீட்டிற்கு வெளியேயே விஜய் காவல் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த காவிரியை பார்த்து விஜய் பேசுகிறார். காவிரி, மெடிக்கல் ஷாப்பிற்கு போகணும் என்று சொல்கிறார். அப்போது விஜய், என்னதான் பிரச்சனை? எதற்காக என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்? உண்மையை சொல்ல வந்தும் ஏன் தடுத்தாய்? என்று கேட்கிறார். ஆனால், காவிரியால் உண்மையை சொல்ல முடியாமல் பசுபதியால் உங்களுக்கு பிரச்சனை வேண்டாம். அதனால் தான் நான் ஒதுங்கி இருக்கிறேன் என்று சொல்கிறார். பின் காவிரியின் வயிற்றில் கையை வைத்து தன் குழந்தையிடம் கொஞ்சுகிறார் விஜய்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் விஜய், நீ சீக்கிரம் என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று நம்புகிறேன் என்கிறார். காவிரியால் விஜயின் அன்பை விலக்கி வைக்க முடியவில்லை. அதற்குப்பின் காவிரியின் அம்மா சொந்தக்காரர் ஒருவரின் விசேஷத்திற்கு கொடைக்கானல் சென்று இருக்கிறார். அப்போது கங்காவிற்கு ஃபோன் செய்த அவருடைய அம்மா, பசுபதி நம்முடைய வீட்டை அவனுடையது என்று சொல்லி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறான் என்று புலம்பி அழுகிறார். உடனே குமரன், காவேரி, கங்கா, பாட்டி எல்லோருமே கொடைக்கானல் கிளம்புகிறார்கள். இத்துடன் செய்து முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full