விஜய்-காவிரி நிலைமையால் பரிதவித்து நிற்கும் குடும்பம், நிவின் கொடுத்த புகார் - மகாநதி

By subhashini · 4/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி பீச்சில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், காவேரி மற்றும் சோகமாக இருந்தார். அப்போது காவிரி, கனவில் என் அப்பா வந்து அழுதார். ஏதோ கெட்டதாக நடப்பது போல இருக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது என்று புலம்பினார். விஜய், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆறுதல் சொன்னார். பின் விஜய், காவிரி இருவரும் காரில் கிளம்பி வந்தார்கள்.

இன்னொரு பக்கம் ராகவ் சொல்லிய நபர் விஜய் கார் பின்னாடியே லாரியில் பாலோ செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்த லாரி விஜய்யின் கார் மீது மோதிவிடுகிறது. விஜய் காவிரி இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் விஜய், காவிரி இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். இதை அறிந்த ராகவ் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

மகாநதி:

விஜய், காவிரி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தார்கள். அப்போது விஜய் கண் விழித்து காவிரியை பார்த்தார். காவிரியும் கண்விழ்த்தார். இருவரும் தங்கள் கைகளை பிடித்து தங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்பட்டார்கள். பின் இருவரையும் ஐசியூவிற்கு அழைத்து சென்றார்கள். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். விஜயின் பாட்டி, தாத்தா இருவரும் ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார்கள். டாக்டர், எங்களால் எதுவும் சொல்ல முடியாது. இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் ரொம்பவே பயப்படுகிறார்கள். அந்த சமயம் அந்த போலீஸ் விபத்தை பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது நிவின், ராகவ் தான் இதை செய்து இருப்பான் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் புகார் கொடுக்கிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் போகிறார். இன்னொரு பக்கம் டாக்டர், காவிரி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பின் காவேரிக்கு ஆப்ரேஷனும் நடக்கிறது. வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full