ஹாஸ்பிடலில் வேதனையில் கதறி துடிக்கும் விஜய்-காவிரி குடும்பம், அடுத்து என்ன? பரபரப்பில் மகாநதி

By subhashini · 3/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரியை பீச்சுக்கு அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார். பின் விஜய், இரண்டு நாள் இங்கேயே தங்கலாம் என்றெல்லாம் சொன்னார். காவிரியும் ரொம்ப சந்தோஷமாக என்ஜாய் பண்ணுகிறார். அதற்குப்பின் புக் செய்த ரெசார்ட்டுக்கு இருவரும் போனார்கள். அங்கு விஜய், காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்தார். இன்னொரு பக்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ராகவ், விஜய்- காவிரியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.

பீச்சில் விஜய் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், காவேரி மற்றும் சோகமாக இருந்தார். அப்போது காவிரி, கனவில் என் அப்பா வந்து அழுதார். ஏதோ கெட்டதாக நடப்பது போல இருக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது என்று புலம்பினார். விஜய், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆறுதல் சொன்னார். பின் விஜய், காவிரி இருவரும் காரில் கிளம்பி வந்தார்கள்.

மகாநதி:

இன்னொரு பக்கம் ராகவ் சொல்லிய நபர் விஜய் கார் பின்னாடியே லாரியில் பாலோ செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்த லாரி விஜய்யின் கார் மீது மோதிவிடுகிறது. விஜய் காவிரி இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் விஜய், காவிரி இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். இதை அறிந்த ராகவ் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறார்கள். அப்போது விஜய் கண் விழித்து காவிரியை பார்த்தார். காவிரியும் கண்விழ்கிறார். இருவரும் தங்கள் கைகளை பிடித்து தங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார்கள்.
பின் இருவரையும் ஐசியூவிற்கு அழைத்து செல்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொல்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். விஜயின் பாட்டி, தாத்தா இருவரும் ரொம்ப எமோஷனலாக அழுது புலம்புகிறார்கள். டாக்டர், எங்களால் எதுவும் சொல்ல முடியாது. இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full