விஜய் காரின் மீது மோதிய லாரி, விஜய்-காவிரிக்கு நேர்ந்த சோகம், என்ன ஆச்சு? பரபரப்பில் மகாநதி

By subhashini · 2/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- நிவின் இருவரும் ராகவின் காரை பின்தொடர்ந்து செல்கிறார்கள். ஒரு வழியாக ராகவை பிடித்து நடு ரோட்டிலேயே விஜய்-நிவின் இருவரும் அடிவெழுத்து வாங்குகிறார்கள். அதற்குப்பின் போலீஸிடம் ராகவை ஒப்படைத்து விட்டார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் கங்கா கொஞ்சம் கொஞ்சமாக ரெக்கவர் ஆகி வந்தார். சில மாதங்களுக்கு பிறகு விஜய்- நிவின் இருவரும் சந்தித்து பேசி கொண்டார்கள். அப்போது நிவின், ராகவ் பெயிலில் வெளியே வந்து விட்டான் என்றார். இதை கேட்டவுடன் விஜய் பதறிப் போனார்.

பின் விஜய், காவிரியுடன் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும். நீங்கள் வீட்டில் எல்லோரையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். நிவின், விஜயின் வீட்டில் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருந்தார். இன்னொரு பக்கம் காவிரி, விஜய் இருவரும் ஹாஸ்பிடல் சென்று வந்த பிறகு ஓட்டலில் சாப்பிட்டார்கள். காவிரி சந்தோசமாக இருந்தார். ஆனால், விஜய் மட்டும் பிரச்சனை ஏதாவது வருமா? என்று பயந்து கொண்டு சுத்தி எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

மகாநதி:

விஜய், காவிரியை பீச்சுக்கு அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார். பின் விஜய், இரண்டு நாள் இங்கேயே தங்கலாம் என்றெல்லாம் சொன்னார். காவிரியும் ரொம்ப சந்தோஷமாக என்ஜாய் பண்ணுகிறார். அதற்குப்பின் புக் செய்த ரெசார்ட்டுக்கு இருவரும் போனார்கள். அங்கு விஜய், காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்தார். இன்னொரு பக்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ராகவ், விஜய்- காவிரியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பீச்சில் விஜய் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், காவேரி மற்றும் சோகமாக இருக்கிறார். அப்போது காவிரி, கனவில் என் அப்பா வந்து அழுதார். ஏதோ கெட்டதாக நடப்பது போல இருக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது என்று புலம்புகிறார். விஜய், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆறுதல் சொல்கிறார். பின் விஜய், காவிரி இருவரும் காரில் கிளம்பி வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ராகவ் சொல்லிய நபர் விஜய் கார் பின்னாடியே லாரியில் பாலோ செய்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் அந்த லாரி விஜய்யின் கார் மீது மோதிவிடுகிறது. விஜய் காவிரி இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் விஜய், காவிரி இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். இதை அறிந்த ராகவ் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full