ஒருவழியாக முடிவுக்கு வந்த மகாநதி சீரியல் , காவிரி-விஜய் ஹாப்பி என்டிங்
ஒருவழியாக முடிவுக்கு வந்த மகாநதி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி,யாழினிக்கு முதலுதவி செய்தார். இதனால் யாழினி, அம்மு மீது கோபமாக இருந்தார். அம்மு, மன்னிப்பு கேட்டுவிட்டு உண்மை தெரிந்தால் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போகும் தயவு செய்து சொல்லாதே என்று யாழினியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். இன்னொரு பக்கம் சாரதா, அம்முவிற்கு காவிரி தான் தன் அம்மா என்ற உண்மை தெரிந்த விஷயத்தை சொன்னார். இதைக்கேட்டு நிவின், யமுனா எல்லோரும் ஷாக் ஆனார்கள். எப்படியாவது விஜய் காவிரியை சேர்த்து வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார்கள்.
காவேரி, விஜயை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்ட விஷயத்தை பற்றி நிவின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். எல்லோருமே விஜய்- காவிரி சேருவதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். இதைப் பற்றி நிவின், விஜயை சந்தித்து சொன்னார். விஜய் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். அதற்குப்பின் காவிரியிடம், திருமண விஷயத்தைப் பற்றி வீட்டில் எல்லோரும் பேசி இருந்தார்கள். காவிரி, நான் விஜய் சந்தித்து பேசணும். அதற்கு பிறகு தான் என்னுடைய இறுதியான முடிவை சொல்வேன் என்றார்.
மகாநதி:
விஜய், காவிரியை அழைத்துக் கொண்டு தங்களுடைய பழைய வீட்டிற்கு வந்தார்கள். காவிரி, இந்த வீடு ஏற்கனவே தெரியும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நான் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன் என்று சொன்னார். பின் விஜய் தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்த நினைவுகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். காவிரிக்கு அப்போது பழைய நினைவுகள் எல்லாம் வந்து செல்கிறது. ஆனால், அவருக்கு தெளிவாக எந்த ஒரு நினைவுகளும் வரவில்லை. காவிரி அந்த பழைய நினைவுகள் வருவதற்காக ரொம்பவே கஷ்டப்படுவதை விஜய் கண்டு வருத்தப்பட்டார். கடைசியில் காவிரிக்கு எல்லா நினைவுகளும் வருகிறது.
சீரியல் ட்ராக்:
காவிரிக்கு விஜயுடன் இருந்த நினைவுகள் எல்லாம் வந்து செல்கிறது. ஆனால், அது முழுவதுமாக காவிரிக்கு புரியவில்லை. இதனால் காவேரி ரொம்பவே கஷ்டப்பட்டார். விஜய், காவிரிக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். அதற்குப்பின் விஜய் அந்த இடத்தில் இருந்து காவிரி அழைத்து வருகிறார். காவிரி, எனக்கு உங்களுடன் ரொம்ப நாட்களாக பழகியது போலவும், நிறைய இடங்களுக்கு சென்றது போலவும் நினைவுகள் வருகிறது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை குழப்பமாக இருக்கிறது, பைத்தியம் பிடிக்கிறது என்றார். விஜய், காவிரியை வீட்டிற்கு அழைத்து வந்தார். பின் இதைப்பற்றி விஜய், நிவின் இடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவேரி, விஜயினுடைய திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. அப்போது யாழினி, வாயை தவறி காவிரியிடம் உண்மையை சொல்லி விடுகிறார். இதனால் காவேரிக்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் பழைய நினைவுகள் வந்து காவிரி, என் குழந்தை எங்கே? என்று கேட்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே காவிரிக்கு பழைய நினைவுகள் வந்தது நினைத்து ரொம்பவே சந்தோஷப்படுகிறார்கள். பின் காவிரி- விஜய் இருவருமே பழையபடி சேர்ந்து விட்டார்கள். பின் நல்லபடியாக குடும்பத்தில் எல்லோருமே சேர்ந்து காவிரி- விஜய்க்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இத்துடன் மகாநதி சீரியல் நல்லபடியாக முடிவடைகிறது