சிறையில் இருப்பதை நினைத்து கதறி அழும் காவிரி, ஆறுதல் சொல்லும் விஜய் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், விஜயை பார்க்க கிளம்பினார். உடனே யமுனா, காவேரி பார்க்கப் போகிறீர்களா? என்று சண்டை வாங்கினார். ஆனால், நிவின் திட்டிவிட்டு சென்றார். இருந்தாலும் விடாமல் நிவினை பாலோ பண்ணி போனார் யமுனா. பின் நிவின்- காவிரி இருவருமே பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யமுனா பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் போலீஸ் வரவில்லை என்று தெரிந்தவுடன் காவிரி- நிவின் இருவருமே உள்ளே போனார்கள். அங்கிருந்து யமுனாவும் கிளம்பி விட்டார். அதற்குப்பின் விஜய், ராகினி உன்னுடைய மாமா பொண்ணு.
அதனால் நீ ரோகினியிடம் உறவினர் என்ற முறையில் பேசி பசுபதி இருக்கும் இடத்தை பற்றி அறிந்து சொல்வாயா என்று கேட்டார். அதற்கு நிவின், என்னால் முடியும் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிவினிடம், யமுனா வழக்கம் போல சண்டை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது நிவின், நான் விஜய்யிடம் பேச போனேன். காவிரியை பழிவாங்க தான் பசுபதி, விஜயை மாட்டி விட்டிருக்கிறான். அதற்காக தான் உதவி செய்யபோனேன். அந்த இடத்திற்கு காவிரி வந்தார் என்று என்று சொன்னார். மற்றபடி நீ சொல்வது போல் ஒன்றுமே இல்லை என்று சொன்னார். ஆனால், அதை யமுனாவால் ஏற்றுக்கொள்ளவே இல்லை. யமுனாவிற்கு நிவின்- காவிரி மீது சந்தேகமாக இருந்தது. இதனால் விஜய் இருக்கும் இடத்தை போலீசிற்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டார் யமுனா,
மகாநதி:
போலீசுமே விஜய் இருக்க இடம் இடத்திற்கு சென்று விட்டார்கள். அப்போது விஜய் எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால், போலீஸ் கேட்கவில்லை. அதிரடியாக போலீஸ் விஜயை கைது செய்து கொண்டு செல்கிறது. இந்த உண்மை அறிந்து குமரன் வீட்டில் சொன்னார். இதை கேட்டவுடன் ரொம்பவே வருத்தப்பட்டு கதறி அழுதார் காவிரி. பின் நிவினுக்கு போன் செய்த காவிரி, விஜயை கைது செய்து விட்டார்கள். எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்றார். நிவின், நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் வேதனையில் காவேரி வீட்டில் இருந்தார்.
கைதான விஜய்:
அந்த சமயம் வந்த யமுனா, கங்காவிடம் விஜயை கைது செய்து விட்டார்களே, காவிரி வருத்தப்படுகிறாரா? என்று நக்கலாக பேசி இருந்தார். கங்காவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது யமுனா, நான்தான் விஜயை போலீசிடம் மாட்டி விட்டேன் என்று சொன்னவுடன் கங்கா- காவிரி இருவருமே ஷாக் ஆனார்கள். எதற்காக இப்படி செய்தாய் என்று கங்கா கேட்டார். அதற்கு யமுனா, நிவின்-காவிரி இருவருமே காதலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். என் வாழ்க்கை பறிப்போகிறது. அதனால் தான் நான் இப்படி செய்தேன். காவிரி, விஜய் உடன் வாழ வேண்டியது என்றால் நிவனுடன் எதுக்கு பேசனும். இரண்டு பேரும் சேர்ந்து ஊர் சுத்துகிறார்கள் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட காவிரி, யமுனாவை அடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் கங்கா, நீ பேசுவது சரியே இல்லை. காவிரியின் கேரக்டரை பற்றி நீ பேசுவதற்கு தகுதியே இல்லை என்று திட்டி விட்டு சென்றார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் காவிரி போலீஸ் ஸ்டேஷன் போகிறார். ஆனால், விஜய்யை நேரடியாகவே சிறையில் அடைத்து விட்டார்கள். இதை அறிந்து நிவின்- குமரன் இருவருமே சிறைக்கு வெளியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜய்யை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. பின் தாத்தா- பாட்டி இருவருமே வக்கீலோடு போலீசை சந்திக்கிறார்கள். ஆனால், அவர்களுமே விஜய்யை சந்திக்க அனுமதிக்கவில்லை. பின் அங்கு காவிரியை பார்த்த பாட்டி கோபத்தில், உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்றும் திட்டுகிறார். காவிரியால் எதுவுமே பேச முடியவில்லை. விஜயின் நிலைமை நினைத்து காவிரி ரொம்பவே அழுது கொண்டிருக்கிறார். பின் விஜயை பார்க்க வேண்டும் என்று போலீஸிடம் கெஞ்சி கதறி அழுகிறார் காவிரி. ஒரு வழியாக விஜய்யை சந்திக்க விடுகிறார்கள்.
https://youtu.be/jDr1L2S9Q_M?si=NnhyzwwyVI3-pc9l
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவிரி, விஜய்யை சந்திப்பதற்காக சிறைக்கு செல்கிறார். அப்போது விஜய், இங்கு எதற்கு வந்தாய்? என்று கேட்கிறார். உடனே காவிரி, என்னால் தான் உங்களுக்கு இந்த பிரச்சனை. நீங்கள் என்னை திருமணம் செய்து இருக்க கூடாது. பணத்தை கடனாக கொடுத்திருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. என்னுடைய நேரம்தான் உங்களை இப்படியெல்லாம் செய்கிறது என்று ரொம்ப எமோஷனாக கதறி அழுகிறார். அதற்கு விஜய், என் காவேரி இது கிடையாது என்று ஆறுதல் சொல்கிறார்.