கிராமத்து ஸ்டைலில் கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விஜய்,காவிரி குடும்பம் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கிருஷ்ணா ஒரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை விஜய் கவனித்தார். அந்த நபர் வேறு யாருமில்லை பசுபதியின் மகன் ராகவ் தான். அதை பார்த்தவுடன் விஜய்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. ஆனால், விஜய் அதைப் பற்றி பேசவில்லை. பின் காவிரி வந்தவுடன் விஜய் அமைதியாகி விட்டார். மறுநாள் காலையில் விஜய்- காவேரி வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ணாவை பார்த்த விஜய், உங்களுக்கு இந்த ஊரில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? நேற்று நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரித்தார்.
கிருஷ்ணா நான் யாருடனும் பேசவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். விஜய், நான் தான் சரியாக கவனிக்கவில்லை என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பின் நிவினை சந்தித்து குமரன் விஷயமாக விஜய் பேசி இருந்தார். அப்போது நிவின், குமரன் அண்ணா மலேசியாவில் இருந்து துபாய் போகவே இல்லை. மலேசியாவில் அவர் வேலை செய்யும் ஆட்களுடன் சண்டை ஏற்பட்டு சென்னைக்கு கிளம்பி இருந்தார். ஆனால், அவர் வீட்டிற்கு வரவில்லை. குமரன் அண்ணா என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார்? என்று புரியவில்லை என்றார். இதை கேட்டு விஜய்க்கு அதிர்ச்சியாக இருந்தது.
மகாநதி:
பொங்கல் விழா கொண்டாடுவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் விஜய் செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் வேலை செய்யும் இடத்தில் பொருட்கள் வராததால் எந்த வேலையுமே நடக்கவில்லை. கிருஷ்ணா அதை அலட்சியமாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் வந்த காவிரி, மேஸ்திரியிடம் விசாரித்தார். அப்போது கிருஷ்ணா செய்த வேலை எல்லாம் காவிரிக்கு தெரிய வருகிறது.
சீரியல் ட்ராக்:
பின் இதைப் பற்றி கிருஷ்ணாவிடம் காவிரி கேட்கின்றார். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாமல் சென்று விட்டார். இன்னொரு பக்கம் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை எல்லாம் சாரதா குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் விஜய்- காவிரி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, வேலை செய்யும் இடத்தில் கிருஷ்ணா செய்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் விஜய்க்கு பயங்கர கோபம் வந்தது. பின் விஜய், இனிமேல் இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய்-காவிரி வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. எல்லோருமே பொங்கல் வைக்க தயாராகி வருகிறார்கள். பின் கிராமத்து ஸ்டைலில் பொங்கல் வைத்து எல்லோரும் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதற்குப்பின் விஜய் போட்டி வைக்கிறார். முதலில் கயிறு இழுக்கும் போட்டி நடக்கிறது. அதில் விஜய் அணி தான் வெற்றி பெறுகிறார்கள். இரண்டாவது ஆக பானை உடைக்கும் போட்டி நடக்கிறது. அதைப்பற்றி விஜய் விவரித்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது