பள்ளியில் விஜய்-காவிரி இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்வார்களா? எதிர்பார்ப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அதற்குப் பின் விஜய், காவிரியின் போட்டோவை பார்த்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி, தனக்கு புது வேலை கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தார். அடுத்த நாள் காலையில் விஜய் தன்னுடைய மகளை புது ஸ்கூலில் சேர்ப்பதற்கு குழந்தை காவிரியை ரெடி பண்ணுகிறார்.
விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. காவிரி இங்கே இருந்திருந்தால் கூட அவளுக்கு பழைய ஞாபகம் வந்திருக்கும். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று தன் மனைவியின் போட்டோ முன்பு நின்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், தன்னுடைய மகளின் அட்மிஷனுக்காக ஸ்கூலுக்கு சென்று இருந்தார். இன்னொரு பக்கம் காவேரி காஞ்சிபுரத்திற்கு கிளம்புவதால் எல்லாம் பேக் செய்து கொண்டு இருந்தார்.
மகாநதி:
அப்போது அங்கு வந்த டிரைவர், விஜய் என்ற பெயரை சொல்லி பேசிக் கொண்டிருந்தார். விஜய் என்ற பெயரை கேட்ட உடனே காவிரிக்கு ஏதேதோ ஞாபகங்கள் வருகிறது. காவிரி ஒரு நிமிடம் அமைதியாகவே நின்று விட்டார். பின் தன் அம்மாவிடம் காவிரி, விஜய்ன்னு எனக்கு யாராவது தெரியுமா? அவரை நான் பார்த்திருக்கிறேனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்டார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி, அந்த பெயரை கேட்டால் எனக்கு என்னென்னவோ நினைவுகள் வருகிறது என்றார். இருந்தாலும் சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் காவேரி- சாரதா இருவரும் காஞ்சிபுரத்திற்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய புது வீட்டிற்கும் சென்று விடுகிறார்கள். காவிரி பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகிறது என்று தயாராகிறார். இன்னொரு பக்கம் விஜய் தன்னுடைய மகளை தயார் செய்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வருகிறார். விஜய்- காவிரி இருவரும் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை. பின் காவிரி, தன் குழந்தை தான் என்று தெரியாமல் அம்முவிடம் பேசுகிறார். பின் விஜய் அழைத்தால் அம்மு சென்று விடுகிறார்.
https://www.youtube.com/watch?v=5gS371304UM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய், தன்னுடைய மகள் அம்முவை பள்ளியில் சேர்த்து விடுகிறார். அதே பள்ளிக்கு தான் ஆசிரியராக காவிரியும் வருகிறார். பின் விஜய், தன் மகளை பள்ளியில் விட்டு கிளம்புகிறார். காவிரி வகுப்பிற்கு செல்கிறார். காவிரி வரும் பாதையில் தான் விஜய்யும் நடந்து கொண்டு வருகிறார். இருவரும் சந்திப்பார்களா? என்பதை இனிவரும் நாட்களில் தான் தெரியும்.