காவிரியுடன் ஹாஸ்பிடல் போன விஜய், போலீசுக்கு உண்மை தெரிய வருமா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரியிடம் போலீஸ் துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவிரி, எனக்கு விஜய் எங்கிருக்கிறார்? என்று தெரியாது என்றார். இருந்தும் விடாமல் போலீஸ் காவிரியின் வீட்டிற்க்கே சென்று சோதனை செய்தார்கள். அங்கு விஜய் இல்லை என்பதை தெரிந்தவுடன் போலீசார் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி வீட்டில் உள்ள எல்லோருமே போலீசிடம் வாக்குவாதம் செய்தார்கள். உடனே காவிரி, எதுவாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பேசுகிறேன். தயவுசெய்து நீங்கள் கிளம்புங்கள் என்று அனுப்பி விட்டார்.
அதற்குப்பின் காவிரிக்கு போன் செய்த விஜய், கம்பெனியில் கொஞ்சம் பிரச்சனை. நீ நேரில் சென்று பார்க்கிறாயா? என்று சொன்னார். காவிரியுமே கம்பெனிக்கு சென்று விஜய் சொன்னது போல் எல்லா பிரச்சனையும் சரி செய்தார். அது மட்டும் இல்லாமல் கம்பெனியின் எல்லா முடிவிலும் பேங்க் அக்கவுண்டிலும் காவிரியின் பெயர் ஜாயின்ட் செய்திருப்பதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் கம்பெனியில் எல்லா வேலையும் முடித்துவிட்டு காவிரி வீட்டிற்கு வந்தார். அப்போது காவிரியின் அம்மா, இவ்வளவு பெரிய ஆர்டரை எப்படி முடிப்பது? தயார் செய்ய இடமும் இல்லை என்று புலம்பி இருந்தார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் விஜய்க்கு போன் செய்த காவிரி, ஆபீஸில் தனது எல்லா உரிமை இருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். விஜய், இதை சொல்ல தான் இருந்தேன். ஆனால், அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது என்று ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, அப்பளம் பிசினஸ் நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. நான் உடனே உங்களிடம் வந்து விடுவேன். பிசினஸ் செய்ய இடம் இல்லாததை பற்றி விஜயிடம் காவிரி சொன்னார். உடனே விஜய், அந்த ஹவுஸ் ஓனரிடம் ஏற்பாடு செய்து தர சொன்னார்.
நேற்று எபிசோட்:
அடுத்த நாள் காலையிலேயே ஹவுஸ் ஓனர் மாமி, அப்பளம் போடுவதற்கு எல்லாம் ஏற்பாடும் நான் செய்து தருகிறேன். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று காவேரி அம்மாவிடம் சொன்னார். இதைக் கேட்டு காவிரி குடும்பமே ஷாக் ஆனது. இதெல்லாம் விஜய் தான் செய்தார் என்று காவிரி தெரிந்து கொண்டு சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் கங்கா, தன்னுடைய செக்கப்புக்கு ஹாஸ்பிடலுக்கு போனார். உடனே காவிரி, தானும் செக்கப் போவதை நினைத்து பார்த்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவேரி செக்கப்புகாக ஹாஸ்பிடல் போயிருக்கிறார். பின் விஜய்க்கு போன் செய்து ஹாஸ்பிடல் வந்திருக்கும் விஷயத்தை காவிரி சொல்கிறார். இதை கேட்டவுடன் விஜய் ரொம்பவே வருத்தப்படுகிறார். காவிரி, நீங்கள் ஹாஸ்பிடல் வர வேண்டாம் என்றார். பின் காவிரி செக்கப்புக்கு உள்ளே போகும்போது விஜய் வந்து விடுகிறார். பின் இருவரும் ஸ்கேனிங் சென்டருக்கு போகிறார்கள். ஸ்கேனில் குழந்தையை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது விஜய், டாக்டரிடம் ஒவ்வொன்றாக கேட்டு விசாரிக்கிறார். குழந்தை நன்றாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னதில் காவிரி -விஜய் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதற்கு பின் காவிரி- விஜய் இருவரும் வெளியே வரும்போது போலீஸ் நின்று கொண்டிருக்கின்றது. இதை பார்த்து இருவரும் ஒளிந்து கொள்கிறார்கள். பின் விஜய், நான் எப்படியாவது போய் விடுகிறேன். நீ பத்திரமாக காரில் செல் என்று அனுப்பி வைக்கிறார். காவிரியை பார்த்து போலீஸ், விஜய் இங்குதான் இருக்க வேண்டும் என்று சோதனை செய்கிறார்கள். பின் வீட்டிற்கு போன காவிரியிடம் கங்காவின் ஸ்கேனிங் ரிபோட்டை காண்பிக்கிறார்கள். அதை பார்த்து காவிரி ரொம்ப சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது