அம்முவுடன் நெருக்கமாக பழகும் காவிரி, பூரிப்பில் விஜய் - உணர்வு பூர்வமான தருணங்கள் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, காவிரிக்கும் பழைய ஞாபகம் இல்லை. என் பேத்தியை பார்க்காமல் ரொம்பவே தவித்து போய் இருக்கிறேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பின் விஜய், என்னிடம் காவிரி இறந்து விட்டதாக சொன்னார்கள். என் மகளுக்காக தான் இத்தனை வருடங்களாக நான் வாழ்ந்து வந்தேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பின் இருவருமே பாட்டி- தாத்தா செய்த துரோகத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
விஜய், நான் கண் விழித்த உடனே காவிரியை தான் கேட்டேன். காவிரி இறந்ததாக சொல்லி என்னையும் என் குழந்தையையும் தவிக்க விட்டார்கள் என்றார். சாரதா, நாங்கள் காஞ்சிபுரம் வந்த பிறகு உங்களுடைய சித்தப்பா, சித்தியை பார்த்தோம். அப்போது நீங்கள் இறந்து விட்டதாகவும் குழந்தை தாத்தாவிடம் வெளிநாட்டில் வளர்வதாகவும் சொன்னார்கள். அதனால்தான் நான் எதுவும் பேசவில்லை என்றார். விஜய், நான் காவிரியை பார்க்க முடியுமா? என்று கேட்கிறார். சாரதா, விஜய்யை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்.
மகாநதி:
காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. சாரதா, அவருடைய பொண்ணு அம்மு நீ பள்ளிக்கூடத்திற்கு வராததால் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தார். உன்னை பார்க்க வேண்டும் என்று அம்மு ஆசைப்படுகிறார். அதனால் அவர் மகளை அழைத்து வருவதற்கு நான் சம்மதம் சொல்லிவிட்டேன் என்றார். விஜய்யும் தன் மகளை அழைத்துக் கொண்டு வர சென்று இருந்தார். காவிரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தன் கனவில் வந்தவர் நிஜத்தில் வருவது எப்படி என்று காவிரி யோசித்துக் கொண்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
தாத்தா, விஜய்யிடம் ரொம்ப எமோஷனலாக பேசி மன்னிப்பு கேட்டார். விஜய், காவிரியை நான் பார்த்தேன். ஆனால், அவளுக்கு பழைய ஞாபகம் இல்லை என்றார். பின் விஜய், அம்முவை தயாராக சொன்னார். இன்னொரு பக்கம் சாரதா தடபுடலாக விருந்து சமைத்துக் கொண்டிருந்தார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் விஜய்- அம்மு இருவரும் காவிரி வீட்டுக்கு வந்து விட்டார்கள். காவிரியை பார்த்தவுடன் அம்மு ரொம்ப சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்து சாரதா-விஜய் இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, விஜய்- அம்மு இருவருக்குமே பார்த்து பார்த்து சாப்பாட்டை பரிமாறுகிறார். அம்மு கட்டாயப்படுத்தியதால் தான் காவிரியும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார். அதற்கு பின் விஜய், காவிரியின் மெடிக்கல் ரிப்பீட்டை கொடுங்கள். எனக்கு தெரிந்த டாக்டரிடம் பேசுகிறேன் என்று சொல்வதால் சாரதாவும் கொடுக்கிறார். அதற்குப்பின் காவிரியை கோயிலுக்கு அழைத்து செல்ல சொல்லி சாரதா கேட்கிறார். விஜயும் சரி என்கிறார். காவிரி அழகாக புடவையில் வருகிறார். அதை பார்த்து விஜய் மெய் மறந்து இருக்கிறார். பின் காவேரி, அம்மு, விஜய் மூவரும் ஒன்றாக காரில் சேர்ந்து செல்வதை பார்த்து சாரதா சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது