விஜய் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன கிருஷ்ணா, வெளிவருமா உண்மை? பரபரப்பில் மகாநதி

By subhashini · 19/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்-காவிரி வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. எல்லோருமே பொங்கல் வைக்க தயாராகி வந்தார்கள். பின் கிராமத்து ஸ்டைலில் பொங்கல் வைத்து எல்லோரும் பண்டிகையை கொண்டாடினார்கள். அதற்குப்பின் விஜய் போட்டி வைத்தார். முதலில் கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. அதில் விஜய் அணி தான் வெற்றி பெற்றார்கள். இரண்டாவது ஆக பானை உடைக்கும் போட்டி நடக்கிறது. அதைப்பற்றி விஜய் விவரித்து கொண்டிருந்தார்.

உரியடிக்கும் போட்டியில் விஜய் வெற்றி பெற்று விட்டார். அதற்குப்பின் சேர் போட்டி நடந்தது. எல்லோருமே சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ணா, சேர் நகர்த்தி விடுவதால் காவேரி கீழே விழுந்து விட்டார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். கிருஷ்ணா, தெரியாமல் நடந்து விட்டது என்று சொன்னார். விஜய்க்கு கிருஷ்ணாவின் மீது பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் நிவினை சந்தித்த விஜய், கிருஷ்ணாவின் நடவடிக்கைகள் பற்றி எல்லாம் சொல்லி கண்காணிக்க சொன்னார்.

மகாநதி:

நிவினும் சரி என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். கங்கா தன்னுடைய கணவர் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். யமுனா, கங்காவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் கிருஷ்ணாவை பின் தொடர்ந்து நிவின் சென்றார். அப்போது கிருஷ்ணா, பசுபதி மகன் ராகவ் உடன் நின்று பேசுவதை பார்த்து நிவின் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிவின், நான் கிருஷ்ணாவை பாலோ பண்ணிப் போனேன். அவன் பசுபதியின் மகன் ராகவ் உடன் பேசிக் கொண்டிருக்கிறான். ஏதோ ரெண்டு பேரும் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்ட விஜய்க்கு ஷாக் ஆகிறது. ஆனால், விஜய், காவிரியிடம் எதுவும் சொல்லவில்லை. அதற்கு பின் நிவின், கிருஷ்ணா, விஜய் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணாவை குடிக்க வைத்து வாயில் இருந்து உண்மையை வர வைக்க விஜய் முயற்சி செய்கிறார். ஆனால் கிருஷ்ணா தெளிவாக இருக்கிறார். உண்மையை சொல்லாமல் சமாளிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

விஜய்க்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. அதற்குப்பின் ஆபீஸில் விஜய், கிருஷ்ணாவுடைய சர்டிபிகேட்டை பற்றி எல்லாம் கேட்கிறார். கிருஷ்ணா, கத்தாரில் இருக்கிறது இங்கு இல்லை என்று சமாளிக்கிறார். பின் விஜய், சாஃப்ட் காபி இருந்தாலும் போதும் அனுப்பிவிடு என்று சொன்னவுடன் கிருஷ்ணா சரி என்கிறார். பின் ராகவ்க்கு போன் செய்த கிருஷ்ணா, விஜய்க்கு என் மீது சந்தேகம் வந்து சர்டிபிகேட் கேட்கிறார் என்று நடந்ததை சொல்கிறார். ராகவ், எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். பயப்படாதே என்று சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full