சொத்து விவகாரத்தில் முத்துமலர் மகனிடம் டீலிங் பேசிய விஜய், கிருஷ்ணா எடுக்கும் முடிவு என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் மனம் மாறி, ஒருநாள் டைம் தருகிறேன். அதற்குள் எல்லா பிரச்சனையும் முடித்துவிட்டு இங்கிருந்து கிளம்பி விடனும். தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பக்கூடாது என்றெல்லாம் சொன்னார். பின் விஜய், தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் முத்து மலர் குடும்பம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதியும் வாங்கி கொண்டார். இதைப் பற்றி விஜய், காவிரியிடம் சொன்னார். சாரதா கோவப்பட்டு சண்டை போட்டார்.
விஜய், சாரதா குடும்பத்தை சமாதானம் செய்து வீட்டிற்குள் அனுப்பி விட்டார். அதற்குப்பின் பாட்டி, தாத்தா, சித்தி எல்லோருமே விஜய்க்காக காவிரியின் குடும்ப பிரச்சனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த விஜய், எல்லோரையும் சமாதானம் செய்ய பார்த்தார். ஆனால் பாட்டி- சித்தி இருவரும் மாறி மாறி காவிரி குடும்பத்தை பற்றி மோசமாக பேசி விட்டார்கள். பின் விஜய், காவிரி- சாரதா பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். எல்லோரையும் சமாதானம் செய்ய பார்த்தார்.
மகாநதி:
அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, இனிமேல் உங்களை கஷ்டப்படுத்தாமல் எல்லா பிரச்சினையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு விஜய், நாம் இருவரும் கணவன்- மனைவி. எந்த பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து சமாளிக்கலாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கு. இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி காவிரியை சமாதானம் செய்து தூங்க வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து மலர், என்ன பண்றீங்க அக்கா? என்று கூப்பிடுகிறார். இதனால் கொந்தளித்த சாரதா சண்டைக்கு போகிறார். இதையெல்லாம் பார்த்து விஜயின் பாட்டி திட்டுகிறார். பின்
காவிரி தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்கிறார். இருந்தாலுமே முத்துமலர் வேண்டும் என்று அக்கா என்று கூப்பிட்டு சாரதாவை வம்புக்கு இழுக்கிறார். இதனால் கொந்தளித்த சாரதா, முத்து மலரை திட்டி அனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் விஜய், கிருஷ்ணாவிடம் அவர்களுடைய பேக்ரவுண்டை பற்றி விசாரிக்கிறார்.பின் விஜய், எனக்கு உங்கள் சூழ்நிலை புரிகிறது.
சீரியல் ட்ராக்:
அந்த வீட்டை ஆறாக பங்கு போட்டு ஐந்து பங்கு காவிரி வீட்டிற்கு, ஒரு பங்கு உங்களுக்கு என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட கிருஷ்ணா ஒத்துக்கொள்ளாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் தன்னுடைய அம்மா, தங்கையிடம் கிருஷ்ணா சொல்கிறார். அவர்களுமே வந்த வரை போதும் கிளம்பி விடலாம் என்று சொல்கிறார். ஆனால், கிருஷ்ணா ஒத்துக்கொள்ளவே இல்லை. சரி பாதியாக பங்கு போட வேண்டும் என்று சொல்கிறார்.இன்னொரு பக்கம் காவேரி பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது