சாரதாவின் வீட்டை மீட்டெடுக்க மூன்று மருமகன்கள் எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரன்- விஜய் இருவருமே சேர்ந்து சாப்பிட்டார்கள். அதற்கு பின் வீட்டில் கங்கா, சாரதா, பாட்டி மூவருமே துணி மடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது குமரனை கடைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்று சாரதா சொன்னார். இதை கேட்டவுடன் கோவப்பட்ட கங்கா, எப்ப பார்த்தாலும் அவரே வேலை செய்யணுமா? விஜய் அப்படின்னா ஒஸ்தியான மாப்பிள்ளையா? அவரே அடுத்த வேலை காசுக்கு நம்மகிட்ட வந்து நிக்கணும் என்றெல்லாம் ரொம்ப தரகுறைவாக விஜய் பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு கோவப்பட்ட காவிரி, கங்காவிடம் சண்டைக்கு போனார்.
கடைசியில் காவிரி, விஜய் எனக்காக எவ்வளவோ செய்திருந்தார். நீ ரெண்டு வேளை சாப்பாடு போட்டு சொல்லி காமிக்க தேவையில்லை. அவரை பார்த்துக்க நான் இருக்கிறேன் என்று திட்டி விட்டு சொன்னார்.
ஆனால், இதெல்லாம் விஜய்க்கு தெரியவில்லை. அதற்கு பின் விஜய், சாரதா- காவிரியை அழைத்துக் கொண்டு பார்க்கிங்க்கு வந்து இருந்தார். மூவருமே ஜாலியாக பேசிக்கொண்டு வாக்கிங் போனார்கள். அப்போது சாரதா, பசுபதி செய்த வேலையை பற்றி ரொம்ப விமோசனாக பேசி அழுதார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் விஜய் தன்னுடைய வேலைக்காக ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால், சரியான பதில் கிடைக்காததால் குழப்பத்தில் இருந்தார். இதையெல்லாம் பார்த்த காவிரி ரொம்பவே வருத்தப்பட்டார். அதோடு காவேரி, விஜயின் பர்சில் பணம் வைத்தார். அதை அதை பார்த்த விஜய், என்னிடம் பணம் இருக்கிறது. நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் நிவின் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். பின் நிவின் அம்மாவிடம் யமுனா பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
நிவின் அம்மா ஒவ்வொன்றுக்குமே பதிலடி கொடுக்கிறார். யமுனாவால் எதுவுமே பேசவில்லை. இன்னொரு பக்கம் குமரன் சந்தோஷமாக பாட்டு கேட்டுக் கொண்டு தன்னுடைய வேலையை செய்கிறார். ஆனால், விஜயால் குமரனை தன்னுடைய அம்மா மரியாதையாக நடத்தவில்லை என்று நினைத்துக் கொண்டு கங்கா கோபப்பட்டு குமரனிடமும் சண்டை வாங்கினார். அதற்கு குமரன், விஜய் புதிதாக வந்தவர். அதனால் தான் அத்தை கவனிக்கிறார். நான் சின்ன வயதிலிருந்து அவர்களிடம் வளர்ந்தவன். நீ அதை எல்லாம் யோசிக்காதே என்று சொல்கிறார். இருந்தாலுமே கங்கா கேட்கவில்லை, குமரனை தான் திட்டிக் கொண்டு இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=pmdAvp0suLk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய், நிவின், குமரன் மூவருமே சந்தித்து பேசுகிறார்கள். அப்போது விஜய், கொடைக்கானல் வீட்டு பத்திரத்தை எப்படியாவது எடுக்க வேண்டும். அதற்காக பசுபதியின் மகனை கடத்த வேண்டும் என்று சொல்கிறார். அதைக் கேட்ட குமரன், அது முடியுமா? பெரிய பிரச்சனை செய்வான் என்கிறார். அதற்கு விஜய், எப்படி இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். அவன் மகனை கடத்தி வைத்துக் கொண்டு எப்படியாவது பாத்திரத்தை தூக்கி அத்தை இடம் கொடுக்கலாம் என்றெல்லாம் திட்டம் போடுகிறார்கள்.