சாரதாவின் வீட்டை மீட்டு எடுக்க மருமகன்கள் போட்ட திட்டம், கோபத்தில் யமுனா செய்த வேலை - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, விஜய் எனக்காக எவ்வளவோ செய்திருந்தார். நீ ரெண்டு வேளை சாப்பாடு போட்டு சொல்லி காமிக்க தேவையில்லை. அவரை பார்த்துக்க நான் இருக்கிறேன் என்று திட்டி விட்டு சொன்னார்.
ஆனால், இதெல்லாம் விஜய்க்கு தெரியவில்லை. அதற்கு பின் விஜய், சாரதா- காவிரியை அழைத்துக் கொண்டு பார்க்கிங்க்கு வந்து இருந்தார். மூவருமே ஜாலியாக பேசிக்கொண்டு வாக்கிங் போனார்கள். அப்போது சாரதா, பசுபதி செய்த வேலையை பற்றி ரொம்ப விமோசனாக பேசி அழுதார்.
விஜய் தன்னுடைய வேலைக்காக ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால், சரியான பதில் கிடைக்காததால் குழப்பத்தில் இருந்தார். இதையெல்லாம் பார்த்த காவிரி ரொம்பவே வருத்தப்பட்டார். அதோடு காவேரி, விஜயின் பர்சில் பணம் வைத்தார். அதை அதை பார்த்த விஜய், என்னிடம் பணம் இருக்கிறது. நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் நிவின் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். பின் நிவின் அம்மாவிடம் யமுனா பேசி இருந்தார்.
மகாநதி:
நிவின் அம்மா ஒவ்வொன்றுக்குமே பதிலடி கொடுத்தார். யமுனாவால் எதுவுமே பேசவில்லை. இன்னொரு பக்கம் குமரன் சந்தோஷமாக பாட்டு கேட்டுக் கொண்டு தன்னுடைய வேலையை செய்தார். ஆனால், விஜயால் குமரனை தன்னுடைய அம்மா மரியாதையாக நடத்தவில்லை என்று நினைத்துக் கொண்டு கங்கா கோபப்பட்டு குமரனிடமும் சண்டை வாங்கினார். அதற்கு குமரன், விஜய் புதிதாக வந்தவர். அதனால் தான் அத்தை கவனித்தார். நான் சின்ன வயதிலிருந்து அவர்களிடம் வளர்ந்தவன். நீ அதை எல்லாம் யோசிக்காதே என்றார். இருந்தாலுமே கங்கா கேட்கவில்லை, குமரனை தான் திட்டிக் கொண்டு இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதாவிற்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால் காவேரி, தெரியாமல் நீவி விட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் சாரதா வலி தாங்க முடியாமல் கத்துகிறார். உடனே விஜய், சாரதாவிற்கு சுளுக்கு எடுத்துவிட்டு நன்றாக நடக்க வைக்கிறார். விஜய் செய்த செயலை பார்த்து சாரதா கண்கலங்கி விடுகிறார். அதற்குப்பின் நிவின்,விஜய், குமரன் மூவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜய் கொடைக்கானல் வீட்டு பத்திரத்தை எப்படியாவது மீட்டு அத்தை இடம் தர வேண்டும். அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பசுபதி மகன் ராகாவை தூக்கி விட்டால் பத்திரத்தை எடுத்து விடலாம்
என்றெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதைக் கேட்டு நிவின், குமரன் இருவருமே ஒத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் கங்கா, யமுனா ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வழக்கம்போல் இருவருமே விஜய், காவிரியை தான் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து யமுனாவின் வீட்டிற்கு நிவின் அம்மா வந்து விடுகிறார். ஆனால், யமுனா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார். இதனால் நிவின் அம்மா பயங்கரமாக கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.