பசுபதியின் அடியாட்களை பொளந்து கட்டிய நிவின்-விஜய், சிக்குவாரா ராகவ்? விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 28/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் டாக்டர், குழந்தை அம்மா இருவரும் கிரிட்டிக்கல் ஸ்டேஜில் இருந்தார்கள். சீக்கிரமாகவே குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியே எடுக்கணும் என்று சொன்னார். இதைக்கேட்டு சாரதா எமோஷனல் ஆகி மயங்கி விழுதார். பின் சாரதா குடும்பத்தில் எல்லோருமே கங்காவின் நிலைமையை நிறுத்தி வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். கங்காவிற்கு ஆப்ரேஷன் நடக்கிறது. இன்னொரு பக்கம் பசுபதி செய்த வேலையை நினைத்து தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருமே கவலைப்பட்டிருந்தார்கள். விஜய்யின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

கங்காவின் பிரசவத்திற்கு ரத்தம் தேவைப்படுவதால் விஜய், நிவின் இருவரும் ரத்தம் கொடுத்தார்கள். அதற்குப்பின் கங்காவிற்கு நல்லபடியாக பிரசவம் நடந்தது. கங்காவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று டாக்டர் சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். தாயும் குழந்தையும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அதற்குப்பின் விஜய், காவிரி இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது பாட்டி பயந்து போய் பேசி இருந்தார். தாத்தாவும் பசுபதியை நினைத்து ரொம்பவே பயந்து போய் இருந்தார்.

மகாநதி:

விஜய், இருவருக்கும் ஆறுதல் சொல்லி புரிய வைத்தார். இருந்தாலும் தாத்தா- பாட்டி இருவரும் விஜயை நினைத்து கவலைப்பட்டார்கள். அதற்குப்பின் பசுபதியால் மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதால் விஜய் தன்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்களை ஹாஸ்பிடலில் வரவைத்து காவிரியின் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க சொன்னார். சாரதா குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை சொன்னார். கங்கா, இன்னும் ஹாஸ்பிடலுக்கு வராததை நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் விஜய், நிவின் இருவரும் பசுபதியை தேடி போனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், நிவின் இருவருமே சென்னையில் பசுபதிக்கு இருக்கும் வீட்டைப் பற்றிய விவரங்களை சேகரிக்கிறார்கள். எப்படியாவது கண்டுபிடிக்கணும் என்று இருவரும் தேடி அலைகிறார்கள். இவர்களுக்கு போலீஸ் ஒருவர் உதவி செய்கிறார். பின் ராகவ் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து இருவரும் சென்று விடுகிறார்க. அங்கிருந்த ரவுடிகள் விஜய், நிவினை உள்ளே போகவிடாமல் வம்பு இழுக்கிறார்கள். கோபத்தில் விஜய் -நிவின் இருவரும் அவர்களை அடித்து விட்டு ராகவை தேடுகிறார்கள். ஆனால், ராகவ் அங்கு இல்லை, தப்பித்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ராகவை தேடி இருவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது போலீஸ், ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை எல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பத்திரமாக இருக்கிறார்களா? என்று விஜய்- நிவின் இருவரும் போன் செய்து விசாரிக்கிறார்கள். அப்போது விஜய் நடந்ததை எல்லாம் காவேரியிடம் சொல்கிறார். அதற்கு பின் ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை அறிந்து கொள்கிறார்கள் விஜய்-நிவின். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full