உண்மையை போட்டு உடைத்த விஜய், ஷாக்கில் காவிரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி, எதற்காக விஜயின் மீது ரொம்ப அக்கறை காட்டுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு சாரதா, அந்த ராகவால் தான் விஜயின் குடும்பத்திற்கும் விபத்து நடந்தது. அந்த ராகவ் உன் மீது வண்டி ஏற்ற வந்தான். அப்போது தவறுதலாக விஜய் காரின் மீதும் மோதிவிடுகிறது. அவருடைய மனைவியும் அதில் இருந்தார்கள். உன்னை சேர்த்த ஹாஸ்பிடலில் தான் விஜயையும், அவர் மனைவியும் சேர்த்து இருந்தார்கள். விஜயின் மனைவி குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டார். விஜயும் ரொம்ப சீரியஸாகத்தான் இருந்தார்.
அதனால் தான் அவரை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார். இதைக் கேட்டு காவிரிக்கு எமோஷனல் ஆகிறது. நம்மால் தான் விஜயின் மனைவி இறந்து விட்டாரோ? என்று கஷ்டப்பட்டார். பின் இதைப்பற்றி விஜய் இடம் சொல்லி காவிரி வருத்தப்பட்டார். விஜய், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் அதை பற்றி யோசிக்காதீர்கள் என்றார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் அடிக்கடி போன் பேசுவது, மெசேஜ் செய்வது என்று இருந்தார்கள். இதை பார்த்து சாரதாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
மகாநதி:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, விஜய்க்காக மேட்ரிமனியில் பெண்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்படியாவது விஜய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மும்முரமாக காவிரி இறங்கி இருக்கிறார். பின் ஒரு பெண்ணை பார்க்க விஜய்யை அழைத்துக் கொண்டு காவிரி செல்கிறார். அப்போது விஜய், எதற்காக இப்படி செய்கிறீர்கள்? எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை என்றெல்லாம் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். காவிரி, பேசி பழகினால் எல்லாமே சரியாகிவிடும் என்கிறார். ஒரு கட்டத்தில் விஜய், எனக்கு உங்களைத்தான் பிடித்திருக்கிறது.
இன்றைய எபிசோட்:
என் பொண்ணுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்கிறார். அதிர்ச்சியடைந்த காவிரி, ஒருவருடைய வாழ்க்கையில் நான் நுழையும்போது அந்த நபருடைய வாழ்க்கையில் நான் தான் முதல் பெண்ணாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் மனைவியை அதிகமாக நேசித்திருக்கிறீர்கள். என்னுடன் நீங்கள் பழகினாலும் அவருடன் இருந்த நினைவுகள் தான் எனக்கு வரும். இதெல்லாம் செட்டாகாது என்று சொல்கிறார். இதனால் விஜய் ரொம்பவே கஷ்டப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் காவிரி, விஜய்யை கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை பார்ப்பதற்கு அழைத்து செல்கிறார். அங்கு அந்த பெண், விஜயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. ஒரு கட்டத்தில் விஜய் அந்த பெண்ணை திட்டி விட்டு செல்கிறார். பின் காவிரியிடம் அந்த பெண், இந்த ஆளு திமிரு பிடித்தவன். இவனுக்கு கல்யாணம் ஆகாது என்று திட்டுகிறார். காவிரிக்கு ஒன்னும் புரியவில்லை.