விஜய்-காவிரியை பிரிக்க நினைக்கும் விஜய் உறவினர்கள் - பரபரப்பில் மகாநதி

By subhashini · 31/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, பசுபதியை பார்த்த விஷயத்தை சொன்னார். உடனே கங்கா, விஜய் பற்றி அம்மாவிடம் பேசலாம். நீயும் விஜயும் சேர்ந்து வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் சென்றார். ஆனால், காவிரி அதை பற்றி கண்டுகொள்ளவில்லை. அப்போது விஜய் போன் பண்ணி கொண்டே இருந்தார். ஆனால், காவிரி போன் எடுக்கவே இல்லை. அதற்குப்பின் குமரன்- கங்கா இருவரும் காவேரி, விஜய் இருவரும் சேர்த்து வைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய், காவிரி போன் எடுக்காததால் ரொம்பவே டென்ஷனாக இருந்தார்.

இன்னொரு பக்கம் நிவின், யமுனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி சண்டை போட, கோபத்தில் நிவின், யமுனா கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். அந்த சமயம் வந்த குமரன், யமுனாவை பிடித்து எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய்? என்று கேட்டார். அப்போது நடந்த எல்லாவற்றையும் நிவின், குமரனிடம் சொன்னார். பின் குமரன், யமுனாவை உள்ளே அனுப்பிவிட்டு நிவினுக்கு அறிவுரை சொன்னார். அந்த சமயம் பார்த்து குமரனுக்கு போன் செய்த விஜய், காவேரி எங்கே என்று கேட்டார். அப்போது குமரன், காவிரி கொடைக்கானலுக்கு கிளம்பி இருப்பாள். உங்களுக்கு தெரியாதா? என்று சொல்ல, விஜய் ரொம்பவே ஷாக் ஆனார்.

மகாநதி:

அஜய்யின் அப்பா, அம்மா இருவருமே விஜயின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவர்கள், தாத்தா பாட்டி இடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், விஜயின் தாத்தா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். பஸ் ஸ்டாண்டில் காவிரி இருந்தார். அந்த சமயம் பார்த்து விஜய் வந்தார். விஜய்யை பார்த்தவுடன் என்ன சொல்வது என்று தெரியாமல் காவிரி அங்கிருந்து கிளம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:

உடனே விஜய், பாய் சொல்லிவிட்டு கிளம்பு. வேறொரு புது வாழ்க்கையை ஆரம்பித்துக்கொள். என்னை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்க என் குழந்தை மீது சத்தியம் பண்ணி இருக்கிறாய். எப்படி உன்னால் இதை செய்ய முடிந்தது என்று கேட்டவுடன் காவிரிக்கு ஒண்ணுமே புரியவில்லை. அப்போது அங்கு வெண்ணிலா வந்தார். உடனே விஜய், நான் குழப்பத்தில் இருந்தே போது வெண்ணிலா நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டார் என்றார்.

சீரியல் ட்ராக்:

நேற்று எபிசோட்டில் வெண்ணிலா, நான் விஜயின் மீது வைத்திருந்த காதலை விட நீ வைத்திருந்த காதல் தான் உண்மையானது. நீ ஊரை விட்டு கிளம்ப மாட்டாய் என்று நினைத்தேன். நான் உங்கள் இருவரையும் பிரிக்க மாட்டேன். நீங்கள் ரெண்டு பேருமே சந்தோஷமாக சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதெல்லாம் கேட்டு காவிரிக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. பின் வெண்ணிலா, விஜய்- காவேரி இருவரையும் சேர்த்து வைத்து விட்டு தன்னுடைய மாமாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரியை பார்த்து அவருடைய அம்மா ஷாக் ஆனார். பின் காவிரி ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார்.

https://www.youtube.com/watch?v=2szBVC4V9-s

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் விஜய், உன்னுடைய அம்மாவிடம் பேச வருகிறேன். அவர் மறுத்தால் உன்னை தூக்கிக்கொண்டு வருவேன் என்று ரொம்ப ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி, பசுபதியால் விஜய்க்கு எப்போதுமே பிரச்சினை விஜய் -காவிரி பிரித்து விடலாம் என்று பிளான் போடுகிறார்கள். மறுநாள் காலையில் காவிரியை சந்தித்த விஜயின் பாட்டி, நீ விஜய்யை விட்டு விலகிவிடு. உன்னால் விஜயின் வாழ்க்கை எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்கிறார். இன்னொரு பக்கம் காவிரியின் வீட்டிற்கு சென்ற விஜயின் சித்தி, உங்கள் மகளை விஜய் உடன் சேர்த்து வைக்கும் எண்ணத்தை விடுங்கள் என்றெல்லாம் பேசுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full