வெண்ணிலாவுக்கு பதிலடி கொடுத்த விஜய்-காவிரி, நிவினை அசிங்கப்படுத்தும் யமுனா - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரி, நான் உனக்கு விஜய்யை விட்டுத் தருகிறேன் என்றால் நீ எப்படி விஜய் மீது சுமத்தி இருக்கும் பழியை நீக்குவாய் என்று கேட்டார். அதற்கு வெண்ணிலா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்களை விஜயின் சித்தப்பா கொலை செய்ய ஆள் அனுப்பியது உண்மைதான். ஆனால், நாங்கள் சென்ற வண்டி வேகமாக போனதால் தான் விபத்து ஏற்பட்டது. இதற்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை. பசுபதி சொன்னது எல்லாம் பொய் என்று சொன்னார். இதை எல்லாம் காவிரிக்கு தெரிந்த நபர் போனில் ரெக்கார்ட் செய்து விட்டார். அந்த சமயம் பார்த்து பசுபதி, ராகினி அங்கு வந்து விட்டார்.
காவிரியிடம் பேச விடாமல் வெண்ணிலாவை அழைத்து சென்றார்கள். பின் காவிரி, ஆதாரம் கிடைத்து விட்டதால் ரொம்ப சந்தோஷப்பட்டார். பசுபதி, காவிரி உன்னிடம் என்ன கேட்டாள்? என்று கேட்க, நடந்ததை எல்லாம் வெண்ணிலா சொன்னார். ஆனால், காவிரி போனில் ரெக்கார்ட் செய்த விஷயம் பசுபதிக்கு தெரியவில்லை. பின் வெண்ணிலா, ராகினியை வீட்டிற்கு அனுப்பி வைத்து பசுபதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அதற்கு பின் காவிரியும் வந்தார். போலீஸ், விஜய் மீது எஃப் ஐ ஆர் போட பார்த்தார்கள். அந்த சமயம் பார்த்து காவேரி உள்ளே போனார்.
மகாநதி சீரியல்:
காவிரி, வெண்ணிலா உண்மையைச் சொன்னால் விஜய்யை விடுவீர்கள் தானே என்று சொன்னார் பசுபதி. அதற்கு வெண்ணிலா இங்கு வரணும் என்ற தோணியில் பார்த்தார். பின் காவிரி, வெண்ணிலா வரவில்லை என்றாலும் அவர் சொன்ன வாக்குமூலம் இருக்கிறது என்று வெண்ணிலா பேசியதை ரெக்கார்ட் செய்த வீடியோவை போலீஸிடம் காண்பித்தார். அதை பார்த்தவுடன் பசுபதி, விஜய் சித்தப்பா, வெண்ணிலா மாமா எல்லோருமே ஷாக் ஆனார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் வெண்ணிலாவின் மாமா தடுமாறி இருந்தார். உடனே விஜயின் சித்தப்பா- பசுபதி இருவருமே, இது பொய். வெண்ணிலாவை மிரட்டி வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
அந்த சமயம் பார்த்து போலீஸ் ஸ்டேஷன் வந்த விஜய்யின் சித்தி, விஜய் மீது எந்த தவறும் இல்லை. இதெல்லாம் என் கணவர் செய்த வேலைதான். அவருக்கு துணை பசுபதி தான் என்று உண்மையை சொல்லி விட்டார். இதனால் போலீஸ் விஜய்யை விட்டு விட்டார்கள். விஜய் வெளியே பார்த்தவுடன் காவிரி அவரை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டார். பின் விஜய்- காவிரி இருவருமே பசுவதியிடம் சவால் விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து தாத்தாவிற்கு ஒரே சந்தோஷம். பின் காவிரி-விஜய் இருவருமே கைகோர்த்து கிளம்பும்போது ராகினி, வெண்ணிலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். விஜய்- காவிரி சேர்ந்து இருப்பதை பார்த்து வெண்ணிலா கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வெண்ணிலா, பொய் சொல்லி என்னை ஏமாற்றுகிறாய். விஜய்யை திருமணம் செய்து வைக்கிறேன் என்று என்னை ஏமாற்றி விட்டாய் என காவிரியை மோசமாக திட்டுகிறார். உடனே காவேரி, நீ செய்த பித்தலாட்ட வேலையுடன் நான் ஒன்னும் செய்து விடவில்லை. விஜய்யை யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன். உன்னிடம் நேர்மை இல்லை. அதனால் நானும் உன்னை ஏமாற்றினேன் என்று சொல்கிறார். வெண்ணிலாவால் எதுவும் பேசமுடியவில்லை. விஜய்-காவிரி இருவருமே வெண்ணிலாவிற்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்கள்
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காவிரி வீட்டுக்கு வராததால் மொத்த குடும்பமே பதறிக் கொண்டிருக்கின்றது. அப்போது நிவின், காவிரி- விஜய்க்கு சப்போர்ட்டாக பேசுகிறார். உடனே யமுனா, நிவினை அழைத்துக் கொண்டு உள்ளே போகிறார். அப்போது யமுனா மோசமாக காவிரியையும் நிவினையும் இணைத்து வைத்து பேசுகிறார். இதனால் கோபப்பட்டு நிவின், யமுனாவை அடித்து விடுகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். யமுனாவிடம் விசாரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் காரில் விஜய்- காவிரி இருவருமே சந்தோசமாக ரொமான்டிக்காக பேசிக்கொண்டு வருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.