பிரச்சனையில் சிக்கி தவித்த நர்மதாவிற்கு உதவி செய்தாரா விஜய்? பரபரப்பில் மகாநதி
நர்மதாவிற்கு உதவி செய்த விஜய்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, காவிரிக்கு கொஞ்ச நாளாக உடல்நிலை சரியில்லை. விபத்துக்கு பிறகு அவள் ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறாள். அவளைப் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும். அதற்காகத்தான் உண்மையை சொல்லி விடுகிறேன். அவளை வைத்து வாழுவது ரொம்பவே கஷ்டம். இதை நான் ஏற்கனவே உங்கள் பையனிடம் சொல்லிவிட்டேன். இருந்தாலும் உங்களிடம் உண்மையை சொல்கிறேன் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்று விட்டார். இதனால் மாப்பிள்ளையின் அம்மா அப்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
சாரதா செய்த வேலையால் மாப்பிள்ளை கார்த்தி, திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் காவேரி பயங்கரமாக கோபப்பட்டார். அதோடு இதற்கு எல்லாம் காரணம் விஜய் தான் என நினைத்துக் கொண்டு சண்டை போட்டார். விஜய், எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார். இருந்தாலும் காவிரி நம்பவில்லை. காவிரி தன்னுடைய அம்மாவிடம் விஜய் சொன்னதை சொல்லி புலம்பி கொண்டிருந்தார். சாரதா அதற்கு சம்பந்தம் இல்லாதது போலவே அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், அம்முவை வேறு ஸ்கூலில் சேர்ப்பதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
மகாநதி:
தாத்தா சோமு, காவிரி சொல்வதற்காக நீ அம்முவை எத்தனை ஸ்கூலில் மாற்ற முடியும்? அவளை நினைத்து பார் என்றார். பின் அம்முவிடம் விஜய், நீ காவேரி மிஸ்ஷிடம் ரொம்ப நெருங்கி பழகாதே. எல்லாம் ஸ்டுடென்ட் போலவே நீயும் டிஸ்டன்ஸ் ஓட இரு என்றார். அம்முவும் சரி என்றார். அதற்குப்பின் பள்ளிக்கூடத்திற்கு அம்மு வந்திருப்பதை பார்த்து காவிரி சந்தோஷப்பட்டார். காவிரி, அம்முவை கட்டி அணைத்து எமோஷனலாக அழுதார். ஆனால், அம்மு தன் தந்தை சொன்னதை நினைத்து பார்த்து நான் கிளம்புகிறேன் எனக்கு நேரம் ஆகிறது என்று காவேரியை விட்டு விலகி சென்றார். இதை பார்த்து காவிரிக்கு கஷ்டமாக இருக்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நர்மதா பிரச்சனையில் இருப்பதை அறிந்து காவிரி-கங்கா வருத்தப்படுகிறார். நர்மதாவை அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒருவர், காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்கிறார். இதனால் நர்மதா ரொம்பவே உடைந்து விடுகிறார். இந்த விஷயம் அறிந்து காவிரி வீட்டில் எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். சாரதா மட்டும் நர்மதாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பின் இதை அறிந்த விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று காவிரி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் நர்மதாவை காதலிக்கும் நபர் வீட்டிற்க்கே வந்து எல்லோரிடமும் மிரட்டிக்கொண்டு இருக்கிறார். அப்போது வந்த விஜய், அந்த நபரை தனியாக ரூமுக்கு அழைத்து சென்று மிரட்டுகிறார். அந்த நபர் பயந்து கொண்டு நர்மதாவிடமும் வீட்டில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார்.
விஜய் செய்த உதவியை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். நர்மதா, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் சாரதா புரிந்து கொள்ளாததால் கோபப்பட்டு சண்டை போடுகிறார்.