ராகவிடம் சிக்கி கொண்ட குழந்தை காவிரி, காப்பாற்றுவாரா விஜய்? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சிறப்பாக காவிரி பிறந்த நாளை கொண்டாடினார்கள். காவிரி. விஜய்க்கு கேக் கொடுத்தார். விஜயும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் யாழினி- அம்மு இருவரும் ஜாலியாக விளையாடினார்கள். அதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டார்கள். அப்போது கங்கா, உன் ஸ்டுடண்ஸ் அப்பா ரொம்ப ஹான்சமாக இருந்தார். நீயே காதலித்து கல்யாணம் செய்து கொள் என்றார். காவிரி, தன் அக்காவை திட்டினாலும் மனதுக்குள் விஜயை ரசிக்கிறார்.
பின் அம்மு காவிரியின் வீட்டிலேயே தூங்குகிறேன் என்று கேட்டதால் விஜயை ஒத்துக் கொண்டார். பின் காவிரி முதன்முதலாக தன்னுடைய மகளுடன் சேர்ந்து தூங்கினார். இதை பார்த்து சாரதாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மறுநாள் காலையில் கங்கா- யமுனா இருவரும் தங்களுடைய ஊருக்கு கிளம்பினார்கள். அப்போது வந்த விஜய், அம்முவை ஸ்கூலுக்கு ரெடி பண்ண அழைத்து சென்றார். சாரதா, நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார். விஜய் சந்தோசப்படுகிறார்.
மகாநதி:
காவேரி பள்ளிக்கூடத்திற்கு தனியாக நடந்து சென்றார். விஜய், அவரை பின் தொடர்ந்து சென்றார். ஒரு கட்டத்தில் காவிரி கோபப்பட்டு விஜயை திட்டி அனுப்பி விட்டார். அதற்கு பின் பள்ளியில் காவிரியை சந்தித்து பிரின்ஸ்பல், நீங்கள் அம்மு விடம் மட்டும் அதிக அக்கறை செலுத்தாதீர்கள். மற்ற பேரன்ஸ்க்கு தெரிந்தால் பிரச்சினை ஆகும். எல்லோரையும் சமமாக நடத்துங்கள் என்றார். இதனால் காவேரி, அம்முவிடம் நெருக்கமாக பழகுவதை நிறுத்த நினைத்தார்.
சீரியல் ட்ராக்:
அம்மு, சாப்பிட வந்தாலும், ஏதாவது கேட்டாலுமே காவிரி ஒரு ஆசிரியர் போலவே நடந்து கொண்டார். இதனால் அம்முவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அம்மு, காவிரிக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அம்மு, நானும் உங்களுடன் வீட்டிற்கு வருகிறேன் என்றார். காவேரி, அதெல்லாம் தேவையில்லை. உன்னுடைய அப்பா வந்தவுடன் கிளம்பு. என் வீட்டிற்கு எல்லாம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் அம்மு ரொம்பவே வருத்தப்படுபட்டார்.
https://www.youtube.com/watch?v=Zlc_Jrdr3zo
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ராகவிருக்கும் இடத்தை அறிந்து விஜய் வந்து சண்டை போடுகிறார். அப்போது அன்பரசு, ராகவ் வண்டி நம்பர் எனக்கு தெரியும். அதை வைத்து
குழந்தையை காப்பாற்றலாம் என்று சொல்கிறார். பின் எல்லோருமே ராகவ் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார்கள். இன்னொரு பக்கம் ராகவ் குழந்தையை கடத்திக் கொண்டு காரில் செல்கிறார்.