பசுபதியால் பயந்து போய் இருக்கும் விஜய் தாத்தா-பாட்டி, கங்காவிற்கு என்ன ஆச்சு? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், யமுனா இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். நிவின் கிளம்பிய உடன் பசுபதியின் ரவுடி ஆட்கள் விஜய் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தார்கள். கேள்வி கேட்ட தாத்தாவையும் அடிக்கிறார்கள். பின் கோபத்தில் கங்கா அவர்களை திட்டி வெளியே போக சொன்னார். அப்போது ஒரு ரவுடி, கங்காவை கீழே தள்ளி விடுவதால் அவருடைய வயிற்றில் அடிபட்டு வருகிறது. வலி தாங்க முடியாமல் கங்கா கத்தினார். சாரதா ரொம்பவே பதறிப் போனார்.
பசுபதி அனுப்பிய ரவுடிகள் கங்காவை கீழே தள்ளிவிட்டதால் அவருக்கு வயிற்றில் அடிபட்டு விட்டது. வலி தாங்க முடியாமல் கங்கா ரொம்பவே கத்தினார். சாரதா புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து விஜய், காவிரி இருவரும் வீட்டிற்கு வருவதால் அந்த ரவுடிகள் ஒளிந்து கொண்டார்கள். கங்காவிற்கு ப்ளீடிங் ஆகுவதால் காவேரி ரொம்பவே பதறிப் போனார். பின் அந்த ரவுடிகள் விஜயை தாக்கினார்கள். விஜய் அந்த ரவுடிகள் எல்லாம் அடித்து துரத்திவிட்டு கங்காவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போனார்.
மகாநதி:
கங்காவை செக் செய்த டாக்டர், குழந்தை அம்மா இருவரும் கிரிட்டிக்கல் ஸ்டேஜில் இருந்தார்கள். சீக்கிரமாகவே குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியே எடுக்கணும் என்று சொன்னார். இதைக்கேட்டு சாரதா எமோஷனல் ஆகி மயங்கி விழுதார். பின் சாரதா குடும்பத்தில் எல்லோருமே கங்காவின் நிலைமையை நிறுத்தி வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். கங்காவிற்கு ஆப்ரேஷன் நடக்கிறது. இன்னொரு பக்கம் பசுபதி செய்த வேலையை நினைத்து தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருமே கவலைப்பட்டிருந்தார்கள். விஜய்யின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கங்காவின் பிரசவத்திற்கு ரத்தம் தேவைப்படுவதால் விஜய், நிவின் இருவரும் ரத்தம் கொடுக்கிறார்கள். அதற்குப்பின் கங்காவிற்கு நல்லபடியாக பிரசவம் நடந்தது. கங்காவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று டாக்டர் சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். தாயும் குழந்தையும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்குப்பின் விஜய், காவிரி இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பாட்டி பயந்து போய் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
தாத்தாவும் பசுபதியை நினைத்து ரொம்பவே பயந்து போய் இருக்கிறார். விஜய், இருவருக்கும் ஆறுதல் சொல்லி புரிய வைக்கிறார். இருந்தாலும் தாத்தா- பாட்டி இருவரும் விஜயை நினைத்து கவலைப்படுகிறார்கள். அதற்குப்பின் பசுபதியால் மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதால் விஜய் தன்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்களை ஹாஸ்பிடலில் வரவைத்து காவிரியின் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க சொல்கிறார். சாரதா குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். கங்கா, இன்னும் ஹாஸ்பிடலுக்கு வராததை நினைத்து வருத்தப்படுகிறார். அதற்குப்பின் விஜய், நிவின் இருவரும் பசுபதியை தேடி போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.