அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்து ஷாக்கான விஜய், காவிரிக்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் தன் கனவில் வந்தவர் போல விஜய் இருப்பதால் காவேரிக்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. இன்னொரு பக்கம் நிவின்- கங்கா- யமுனா எல்லோரும் கான்ஃபரன்ஸ் காலில் காவிரியை பார்க்க மாப்பிள்ளை வீட்டில் வருவதாக சொன்னார்கள். சாரதாவிற்கு என்ன சொல்வதே புரியவில்லை? சரி என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி தன் கனவில் வந்தவரை நேரில் பார்த்ததாக சொன்னார். சாரதா அமைதியாக இருந்தார். பின் சாரதா, உன்னை பெண்பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று சொன்னவுடன் காவேரி ஷாக் ஆனார். தன்னைப் பெண் பார்க்க வரும் விஷயத்தை அறிந்தவுடன் காவிரி, கங்காவிற்கு ஃபோன் செய்து சண்டை போட்டார்.
கங்கா, அவர்கள் உன்னை பார்க்கத்தான் வந்தார்கள். உனக்கு விருப்பம் இல்லை என்றால் கல்யாணம் வேண்டாம் என்றார். இதனால் காவிரியும் கங்கா சொன்னது போல தயாராகி வந்தார். பின் மாப்பிள்ளை வீட்டில் காவிரியை பிடித்து விட்டது. சீக்கிரமாகவே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம் என்றார்கள். இதையெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் வந்தது. பின் மாப்பிள்ளை வீட்டார் சென்றவுடன் காவேரி, சாரதாவிடம் சண்டை போட்டார். அதற்குப்பின் சாரதா ரோட்டில் வந்து கொண்டிருக்கும்போது விஜயின் சித்தப்பா அன்பரசு, சித்தி இருவரும் பார்த்து விட்டார்கள்.
மகாநதி:
அப்போது சாரதா, தன்னுடைய பேத்தியை பற்றி விசாரித்தார். கோபத்தில் அன்பரசன், அவர் வெளிநாட்டில் இருந்தார். நீங்கள் எங்கள் குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என்று திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் அம்மு விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து அடிபட்டு விடுகிறது. இதனால் காவேரி அவருக்கு முதலில் உதவி செய்து பார்த்துக்கொண்டார். பின் விஜய்க்கு போன் செய்த காவேரி, அம்முக்கு அடிபட்ட விஷயத்தை சொன்னார். காவிரி வாய்சை கேட்டவுடன் விஜய் உறைந்து போனார். பின் அம்முவுக்கு அடிபட்டதால் பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், போனில் பேசியது காவிரி குரல் மாறியே இருக்கிறது. எனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது? என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்திற்கு வந்து விடுகிறார். ஆனால், அங்கு காவிரி இல்லை. பின் அம்முவை பார்த்து விஜய் விசாரிக்கிறார். அதற்குப்பின் விஜய், டாக்டருக்கு போன் செய்து வீடியோ காலில் அம்முவின் காலை காண்பிக்கிறார். விஜய் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது காவிரி கிராஸ் பண்ணி போகிறார். ஆனால், அதை விஜய் கவனிக்கவில்லை. பின் வீட்டிற்கு வந்த விஜய், அம்முவை தூங்க வைத்துவிட்டு மருந்து வாங்க கடைக்கு செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அந்த வீடியோ காலில் டாக்டர் சொன்ன மருந்து எல்லாம் விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காவிரி செல்வதை பார்த்து விஜய் சாக்காகிறார். உடனே விஜய், ஸ்கூலுக்கு ஓடி போகிறார். ஆனால், டீச்சர் யாரும் அங்கு இல்லை. இன்னொரு பக்கம் யமுனாவிற்கு அடிபட்டு இருப்பதால் சாரதா- காவிரி இருவரும் விசாரிக்கிறார்கள். பின் யமுனாவை பார்க்க இருவருமே கிளம்பி போகிறார்கள். இன்னொரு பக்கம் விஜய், அம்முவிடம் அவருடைய கிளாஸ் டீச்சர் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை காண்பிக்கிறார். அம்மு, இவர்தான் என்னுடைய டீச்சர் என்கிறார். ஷாக் ஆன விஜய் குழப்பத்திலேயே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது